Xiaomi- MI3: MIUI Rom இன் அதி நவீன அலைபேசி
Android, Feature, Product 1:20 PM
ஆண்டுராய்டு போன்களுக்கான MIUI Rom குறித்து நமது இந்த பதிவில் படித்திருப்பீர்கள். ஆண்டுராய்டு போன்களின் செயல் திறனும் iPhone இன் அழகும் சேர்ந்தது தான் இந்த MIUI. இதனை உங்கள் அலைபேசியில் நிறுவ Rooting, Modding போன்றவை பற்றிய அறிவு அவசியம். Rooting, Moding செய்து பழக்கப்படாதவர்களுக்கு இந்த MIUI ஒரு கனவாகவே இருந்தது. இதை போக்க Xiaomi நிறுவனம் தந்து MI3 அலைபேசியை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
இந்த அலைபேசி குறித்து சொல்ல வேண்டும் என்றால், இன்றைய சந்தையில் உள்ள அனைத்து உயர்தர அலைபேசிகளுடன் போட்டி போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.
Qualcomm Snapdragon 800 8274AB 2.3GHz processor, Adreno 330 450MHz GPU, 2GB LPDDR3 RAM, and eMMC 4.5 flash memory ஆகிய வன்பொருள்களை கொண்டுள்ளது. Samsung நிறுவனத்தின் Galaxy S5 உடன் வேகத்தில் ஒப்பீடு செய்தால் அதனை மிக எளிதாக தோற்கடித்து விடுகிறது இந்த MI3.
அலைபேசியின் திரை 1080p தெளிவுள்ள படங்களை துல்லியமாக காட்ட சக்தி பெற்றது. மேலும் ஈரமான சூழ்நிலைகளிலும் மற்றும் கை உரை அணிந்திருந்தால் கூட இயக்கும் வண்ணம் இந்த திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
காமிரா: ஐந்து அடுக்கு லென்ஸ்களை அடங்கிய 13mp பின்புற காமிராவையும், காணொளி அழைப்புகள் செய்வதற்காக 2mp முன்புற காமிராவையும் இது பெற்றுள்ளது.
பெரும்பாலும் இது போன்ற உயர்ரக அலைபேசிகளின் மின்கலங்கள் (Battery) அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதில்லை. ஆனால் இந்த அலைபேசியில் இதை சரி செய்வதற்காக 3050mah அளவு மினகலன்களை பொருத்தியுள்ளது. இது உங்களுக்கு 21 மணி நேர 3G பயன்பாடு / 25 மணி நேர 2G பயன்பாடு தரக்கூடியதாக இருக்கின்றது.
இன்னும் எத்தனையோ தொழிநுட்ப சிறப்பம்சங்களை கொண்டிருந்தாலும் இதில் ஒரு சிறிய சறுக்கல் External Memory Card இட முடியாதது தான். இதில் 16gb inbuilt memory மட்டும் பெற்றுள்ளது. இது ஒரு சிறிய சறுக்கல் என்றாலும் USB OTG மூலம் USB Flash Drive களை நேரடியாக இதில் பயன்படுத்த முடியும்.
இத்தனை அம்சங்கள் அடங்கிய இந்த அலைபேசியின் விலை தான் ஆச்சர்யத்தக்கது. வெறும் 13999 ரூபாய் மட்டுமே. இதை விட செயல்பாட்டு திறனில் குறைவான Samsung Galaxy S5 விலை சுமார் 38000ருபாய்.
இந்தியாவில் Flipkart இணைய தளம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த அலைபேசியினை வாங்குவதற்கு பெரும் போட்டி நிலவுவதால் முன்பதிவு செய்து வாங்கும் வசதியை Flipkart இணையதளம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அலைபேசியை வாங்க வேண்டுமா?