MIUI - Android பயனாளர்களுக்கான ஸ்டைலான ROM
Android, Feature, Miui, Mod, Rom 7:00 AM
Android பிரியர்களுக்கும் iPhone பிரியர்களுக்கும் தங்கள் ஃபோன் தான் சிறந்தது என்பதில் தீராத பகை இருந்து கொண்டே இருக்கும். அதில் iPhone பிரியர்கள் வைக்கும் மிகப்பெரிய வாதம் Android அசிங்கமாக இருக்கிறது என்பது. இது ஒரு வகை உண்மை தான். ஆப்பிள் ஃபோன்களின் UI டிசைன் Android போன்களின் டிசைனை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். ஆப்பிளின் சிறப்பம்சமே அதன் அழகு தான்.
இன்று Android போன்களும் ஆப்பிளுக்கு போட்டி போடும் அளவில் பல மாற்றங்களை கொண்டுவந்தாலும் அதன் UI கொஞ்சம் போர் தான். அதை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்தது தான் இந்த MIUI ROM.
Android போன்களை பொறுத்தவரை ROM என்பது கணினியில் உள்ள ஒரு OS போன்றது என்று சொல்லலாம். Android போன்களுக்கென இன்று இணையத்தில் எக்கச்சக்க ROMகள் உண்டு. அவை Cyanogenmod, Paranoid Android, AOKP, MIUI, Pac Man என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்த ROM களுள் Cyanogenmod பற்றி நம் முந்தைய பதிவு ஒன்றில் பதிந்திருந்தோம். (பார்க்க)
இப்பொழுது நாம் MIUI ROM குறித்து பார்க்கலாம்.
முன்பே கூறியது போல இதன் சிறப்பம்சம் இதன் ஸ்டைல் தான். சீனர்களால் உருவாக்கப்பட்ட இந்த MIUI ROM சீனர்களுக்கே உரித்தான அந்த அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோர்க்கு ஆப்பிள் போனின் அழகையும் ஆண்டுராய்டு போன்களின் அம்சங்களையும் ஒன்றாக தரும் அற்புதம் இது என்று கூறலாம்.
இதன் அம்சங்களில் சில:
Phone & Message
Dialer மூலமாக நம் தொடர்புகளை கண்டறியும் வசதி, அழைப்புகள் (Calls) வரும்போது திரை முழுவதும் அழைப்பவரின் படம், அழைப்பவரின் இடம் போன்ற தகவல்கள் திரையில் காணும் வசதி. ஸ்பாம் கால்களை தன்னிச்சையாகவே தவிர்க்கும் அம்சம் போன்ற பல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது. அது போல Cloud Messaging வசதிகளும் இந்த ROM-ல் உள்ளது. இதனை கட்டணம் இல்லாமல் இணையத்தை மட்டும் பயன் படுத்தி குறுந்தகவல்களை அனுப்பலாம்.
Privacy & Protection
இந்த MIUI ROM-ல் பல கூடுதல் அம்சங்கள் உள்ளன.
உங்கள் இணைய இணைப்பு மாத அளவினை எட்டிவிட்டதா என்பதனை அறிய Network Assistant,
உங்களுக்கு வரும் தேவையல்லாத அழைப்புக்கள், குறுந்தகவல்களை தவிர்க்க Anti Spam,
போனில் உள்ள செயலிகள், அதன் தரவுகள் அனைத்தையும் பாதுகாப்பாக ஒரு காப்புநகல் (Backup) எடுத்து வைக்க Backup செயலி,
Android போன்களில் மிகவும் விமர்சிக்கப்படுவது அதன் பாதுகாப்பு அம்சங்கள் தான். அதை சரி செய்யும் பொருட்டு இதில் பல பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அலைபேசியில் உள்ள முக்கிய செயலிகளை கடவுச்சொல்(Password) இட்டு வைக்கும் வசதி,
அலைபேசியை வைரஸ் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலிகளிடம் இருந்து காக்க Virus Scan,
ஒவ்வொரு செயலிகளுக்கும் குறிப்பிட்ட அனுமதிகளை கொடுக்க / திரும்ப பெரும் அம்சங்கள்,
உங்கள் அலைபேசி தொலைந்துவிட்டால் அதன் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் சேவை,
அலைபேசியில் தன்னிச்சையாக இயங்க தொடங்கும் செயலிகளை கட்டுபடுத்தும் வசதி,
என்று எத்தனையோ சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இந்த அம்சங்கள் மூலம் உங்கள் தகவல்களை பாதுகாப்பாகவும், அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துகொள்ள முடியும்.
Customization
இந்த MIUI ROM-ன் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று தான் அலைபேசியின் அமைப்புகளை நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைப்பது.
MIUI ROM களுக்கு என்று எண்ணிலடங்கா தீம்கள் உள்ளது. இதன் மூலம் உங்கள் அலைபேசியின், LockScreen, Icon என அனைத்தையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். தினம் தினம் உங்கள் அலைபேசியை புதியது போல் மாற்றலாம்.
இன்னும் சிறிய விஷயங்கள் முதல் அனைத்திலும் இது Android தானா என்று நீங்கள் வியக்கும் வண்ணம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவங்கள் தர கூடியதாக இருக்கும்.
இது கூகிள் இன் Nexus வரிசை போன்கள், HTC, Samsung, Motorola, LG, Sony Ericsson, opp, Huawei போன்ற நிறுவனங்களின் போன்களுக்கும் இன்னும் இன்ன பிற நிறுவனங்களின் போன்களுக்கும் கிடைக்கபெறுகிறது.
உங்கள் போனிற்கு MIUI Rom இருக்கிறதா என்று அறிந்துகொள்ள கீழுள்ள தளத்தில் சென்று பார்க்கவும்.
http://en.miui.com/download.html
இதனை உங்கள் அலைபேசியில் எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதை இந்த முகவரியில் உள்ள Flashing Guide இல் சென்று காணவும்.

இந்த MIUI ROM-ல் பல கூடுதல் அம்சங்கள் உள்ளன.உங்கள் இணைய இணைப்பு மாத அளவினை எட்டிவிட்டதா என்பதனை அறிய Network Assistant,