ரூட் இல்லாமல் உங்கள் அலைபேசி தகவல்களை காப்பெடுப்பது (Backup) எப்படி?
Android, Feature 10:35 AM
பின் உங்கள் அலைபேசியில் Helium செயலியை
நிறுவ வேண்டும்.
Helium
செயலியை முதலில் திறந்ததும் படத்தில் உள்ளது போன்ற ஒரு செய்தி வரும். அதில் "OK" என்பதை
தேர்வு செய்து உங்கள் Google கணக்கின்
ஐடி, பாஸ்வோர்ட் ஐ கொடுத்து மற்றுமொரு முறை "OK"
கொடுக்கவும்.
பின் Chrome இணைய உலாவி மற்றும் Helium for Chrome ஐ
உங்கள் கணினியில் நிறுவவும்.
Chrome இணைய உலாவியை பதிவிறக்கம் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும்.
Helium for Chrome செயலியை
பதிவிறக்கம் செய்ய இந்த பக்கத்தில் சென்று "+
Free" என்கிற பொத்தானை அழுத்தி "Add" என்ற பொத்தானை அழுத்தவும்.
இந்த Helium for Chrome செயலியை Chrome Apps மெனு மூலமாகவும் அல்லது Chrome இன் பூக்மார்க் பட்டியில் இருந்தும் இயக்கலாம்.
சில நொடிகளில் Helium
செயலி செயலாக்கப்பட்டு படத்தில் உள்ளது போல செய்தி தோன்றும்.
இப்போது உங்கள் கணினியில் இருந்து உங்கள் அலைபேசியின் இணைப்பை துண்டித்து விடலாம்.
உங்கள் அலைபேசி ரூட் செய்யப்படாததால் மேலுள்ள
செய்முறையை ஒவ்வொரு பூட்டின் பிறகும் செய்தால் மட்டுமே Helium பயன்படுத்தி உங்கள் செயலி தகவல்களை
காப்பெடுக்க முடியும்.
செயலி தகவல்களை காப்பெடுக்க
அலைபேசியில் உள்ள Backup
பகுதியில் சென்று எந்தெந்த ஏயளியின் தகவல்களை
காப்பெடுக்க வேண்டுமோ, அந்த செயலியை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் Backup என்ற பொத்தானை அழுத்தி இந்த
அத்தகவல்களை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இனி உங்கள்
செயலி தகவல்கள் காப்பெடுத்தாகி விட்டது.
இந்த தகவல்களை மீண்டும் உங்கள் அலைபேசியில் நிறுவ "Restore and Sync" பகுதியில்
சென்று Restore செய்து
கொள்ளலாம்.
இந்த செய்முறையில் பிரச்சனை
இருக்கும் பட்சத்தில்
Helium
செயலியில் "Enable PTP" யை தேர்வு செய்து பின் அலைபேசியில் "Camera Mode (PTP)" தேர்வு
செய்தால் சரியாகிவிடும்..
மேலும்
பிரச்சனைகள் இருந்தால் உங்கள் கணினியில் ADB driver களை நிறுவ வேண்டி இருக்கும்.
அதற்க்கு இந்த கோப்பை பதிவிறக்கம் செய்து நிறுவினாலே போதும்.


















