Raccoon - கூகிள் ஆண்டுராய்டு செயலிகளை நேரடியாக கணினிக்கு தரவிறக்கம் செய்ய

கூகிளின் Play Storeஇல் இருந்து செயலிகளை(Application) தரவிறக்கம் செய்ய வேண்டுமானால் ஆண்டுராய்டு அலைபேசி மூலமாக மட்டுமே செய்ய முடியும். அதற்கு மாற்றாக இந்த செயலிகளை நேரடியாக கணினிக்கு தரவிறக்கம் செய்யலாம் - Raccoon உதவியுடன்.

சந்தையில் உள்ள Samsung S5, HTC One M8 போன்ற சமீப காலங்களில் வெளியான அலைபேசிகளில் பெரும்பாலும் அனைத்து செயலிகளும் தரவிறக்கம் செய்ய முடியும். ஆனால் மத்திய தர விலைபட்டியலில் அடங்கும் அலைபேசிகளில் சில செயலிகளை தரவிறக்கம் செய்யும்போது  "இது இந்த அலைபேசிக்கு பொருத்தமற்ற செயலி" என்று கூறி தரவிறக்கத்தை கூகிள் தடுக்கும். இது போன்ற செயலிகளை  இதர தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும்போது அது பாதுகாப்பானதா என சந்தேகம் எழும். அப்படியான செயலிகளையும் பாதுகாப்பாக கூகிள் Play Store இல் இருந்தே தரவிறக்கம் செய்ய Raccoon உதவுகிறது.

Raccoon மென்பொருளானது உங்கள் கூகிள் மின்னஞ்சல் மூலம் ஒரு அலைபேசி போல தன்னை காட்டிக்கொண்டு Play Store இல் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்யும். இதனை செய்ய ஒரு கூகிள் மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல் (Password) தேவை. உங்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் இந்த மென்பொருளுக்கு என ஒரு தற்காலிக முகவரியை உருவாக்குங்கள் (பாதுகாப்பிற்காக).

பின் இந்த தளத்திற்கு சென்று Raccoon மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்.

Raccoon உங்கள் கணினியில் இயங்க உங்கள் கணினியில் Java நிறுவப்பட்டிருக்க வேண்டும். அப்படி Java நிறுவப்படவில்லை என்றால் இந்த தளத்திற்கு சென்று Java மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

கடைசியாக உங்கள் அலைபேசியின் Device ID தேவை. அதனை பெற இந்த தளத்திற்கு சென்று Device ID செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவி அதனை பெற்றுக்கொள்ளுங்கள்.



இனி Raccoon ஐ திறந்து அதில் உங்கள் முகவரி, கடவுச்சொல், மற்றும் Device ID கொடுத்து புகுபதிகை (Login) செய்யவும்.

அடுத்து தேடு பட்டியில் நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் செயலியின் பெயரை பதிந்து Download என்னும் பொத்தானை அழுத்தினால் அந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி .apk வடிவில் இருக்கும். இதனை உங்கள் அலைபேசிக்கு மாற்றி திறந்தால் செயலி நிறுவப்பட்டு விடும்.

Device ID:
Click / Scan

Posted Unknown on 11:26 AM. Filed under , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Raccoon - கூகிள் ஆண்டுராய்டு செயலிகளை நேரடியாக கணினிக்கு தரவிறக்கம் செய்ய

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.