Onion Share - உங்கள் தரவுகளை பாதுகாப்பாக பரிமாற
Feature, Security, Tor 7:00 AM
பொதுவாக நாம் அளவில் பெரியதாக இருக்கும் தரவுகளை(Data) உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பரிமாற Dropbox, Google Drive போன்ற சேவையினை பயன்படுத்துவோம். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நாம் இந்த சேவையினை முழுமையாக நம்ப வேண்டும். வேறு யாரு கண்களிலும் பட்டுவிட கூடாது என்று நீங்கள் நினைக்கும் தரவுகளை மற்றவர்கள் காண மாட்டார்கள் என்று எந்த வித உத்திரவாதமும் இல்லை. இதற்கான ஒரு மாற்றாக Bittorrent Sync சேவை அமைந்தது.
(Bittorrent Sync ஐ அலைபேசியில் உள்ள படங்களை உங்கள் கணினிக்கு நகலாக்கம் செய்வது குறித்த நம் பதிவை காண இங்கே சுட்டவும்.)
Bittorrent Sync சேவையில் உள்ள இடர்பாடு என்னவென்றால் ஒரு தரவை பகிர்பவரும், பெறுபவரும் Bittorrent Sync மென்பொருளை தங்கள் கணினியில் நிறுவி இருக்க வேண்டும். பெறுபவர் முழுவதுமாக தரவுகளை பதிவிறக்கம் செய்ய பகிர்பவரின் கணினி இணைப்பிலேயே இருக்க வேண்டும்.
இது ஏன் என்றால் நீங்கள் பகிரும் தரவுகள் எந்த வித நடுதரகர்களும் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்து பெறுபவரின் கணினிக்கு நேரடியாக பரிமாறப்படும். இது ஒரு பாதுகாப்பான அம்சமாக இருந்தாலும் பலருக்கு எந்நேரமும் இணையத்தில் இருக்க முடியாது என்கிற காரணத்தால் இது ஒரு இடராக மாறிவிடுகிறது. இந்த குறையினை போக்கும் ஒரு மென்பொருள் தான் Onion Share.
Onion Share எவ்வாறு செயல்படுகிறது?
Onion Share இன் அம்சங்களாக கூறப்படுவது அடையாளம் இல்லாத(Annonymous) மற்றும் பாதுகாப்பான தரவு பரிமாற்றம்(Data Transfer). Onion Share மூலம் ஒருவர் ஒரு தரவை பரிமாறும் போது அந்த தரவுகள் மறையாக்கம்(Encrypted) செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட Tor சேவையில் இயங்கும் ஒரு தற்காலிக இணையதளத்தில் தரவேற்றப்படும்(Upload). பின் அந்த இணைய தளத்தின் முகவரி பெறுனருக்கு அனுப்பப்படும். தரவின் பெறுனர் Tor உலாவி (Tor Browser) மூலம் அந்த முகவரிக்கு சென்று அந்த தரவுகளை எந்நேரமும் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
இந்த சேவையில் உள்ள பயன்கள்:
பாதுகாப்பான மற்றும் அநாமதேய (Annonymous) தகவல் பரிமாற்றம்.
அனுப்புனர் பெறுனர் இருவரும் Onion Share மென்பொருளை தங்கள் கணினியில் நிறுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அனுப்புனர் பெறுனர் இருவரும் ஒரே நேரத்தில் இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
பெறுனர் தரவுகளை பதிவிறக்கம் (Download) செய்த பின் தானாகவே உங்கள் தரவோடு சேர்ந்து அந்த இணைய பக்கமும் அழிந்துவிடும். அதன் மூலம் உங்கள் தகவலும் வேறு எவர் கையிலும் சிக்காது.
இதனை பயன்படுத்துவது எப்படி?
முதலில் உங்கள் கணினியில் TOR இணைய உலாவி நிறுவி இருக்க வேண்டும்.
(Tor உலாவியை பதிவிறக்கம் செய்வது மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை அறியாதவர்கள் நமது இந்த பதிவை காணவும்.)
அடுத்து Onion Share மென்பொருளை பதிவிறக்கம் செய்த உங்கள் கணினியில் நிறுவவும். பதிவிறக்கம் செய்
பின் Tor இணைய உலாவியை திறந்து, அதன் பின் Onion Share மென்பொருளை திறக்கவும்.
Onion Share மென்பொருளை திறந்தவுடன் நீங்கள் பகிர விரும்பும் கோப்பினை தேர்வு செய்ய ஒரு ஜன்னல் திறக்கும்.
தற்பொழுது இந்த மென்பொருள் மேம்பாட்டு நிலையில் இருப்பதால் ஒருமுறை ஒரு கோப்பு மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
கோப்பினை தேர்வு செய்ததும் படத்தில் உள்ளது போல அந்த கோப்பிற்கான முகவரி உங்களுக்கு தரப்படும். அதனை நீங்கள் யாருடன் பகிர விரும்புகிறீர்களோ அவர்களுக்கு கொடுத்தால் வெறும் Tor இனிய உலாவியை மட்டும் வைத்து அந்த கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் அந்த ஜன்னலில் கீழ் பகுதியில் Close automatically என்று ஒரு தேர்வு இருக்கும்.
இது உங்கள் கோப்பு தரவிறக்கம் செய்யப்பட்ட உடன் தானாக அழிந்து போக செய்யப்படும் தேர்வு. நீங்கள் ஒரே கோப்பினை பலருக்கு பகிர்ந்து கொள்ள விரும்பினால் Close automatically என்பதை தேர்வு செய்யாமல் விட்டுவிடவும். பின் அனைவரும் பதிவிறக்கம் செய்த பின் மீண்டும் அதை தேர்வு செய்தால் உங்கள் தரவுகள் அழிந்துவிடும்.