போனில் எடுக்கும் படங்களை உலகின் எந்த பகுதியிலும் உடனுக்குடன் சேமிப்பது எப்படி?
Android, Feature, Tips 2:58 AM
போனில் எடுக்கும் படங்களை உலகின் எந்த பகுதியிலும் உடனுக்குடன் சேமிப்பது எப்படி?இன்று Cloud Storage வசதிகளை தரும் பெரும்பாலான நிறுவனகள், நமது போனில் நாம் எடுக்கும் படங்களை பதிவேற்றம் செய்ய வசதிகளை தருகிறார்கள். இன்னும் சில நிறுவனகள் நமது படங்களை பதிவேற்றம் செய்ய இலவசமாக இடங்களை தருகிறார்கள். அதற்கான விலையாக நாம் நம் படங்களை அவர்களை நம்பி கொடுக்க வேண்டியுள்ளது.
பல நாடுகளின் பிரதமர்களே ஓட்டுகேட்கபடும் இந்நாட்களில் நமது தகவல்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பது கேள்விக்குறியே.
நம் போனில் எடுக்கப்படும் படங்களை உடனுக்குடன் வேறொரு தளத்தில் சேமிப்பது சிறந்த அம்சமே. ஆனால் அது நமது தகவலின் பாதுகாப்பை அடகு வைத்து செய்யப்படக்கூடாது.
இந்த அம்சங்களை நமது தகவல்களுக்கு பாதுகாப்பு குறையாத வண்ணம் செய்வது எப்படி?
நம் பக்கத்தில் ஏற்கனவே Bitottent Sync என்ற மென்பொருள் பற்றி பார்த்தோம். அதில் ஒரு அம்சம் நமது போனில் உள்ள தகவல்களை வேறு இடத்தில் இருக்கும் மற்றொரு கணினி அல்லது போனில் உடனுகுடம் இணையம் மூலம் சேமிக்கலாம்.
Bittorrent மென்பொருளில் Backup என்ற விருப்பத்திற்கு சென்று அதில் Add Folder என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின் “Choose Folder” என்னும் தேர்வில் உங்கள் போனில் உள்ள DCIM என்ற அடைவை (FOLDER) தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின் secret என்னும் உங்கள் கோப்புகளுக்கான Bittorent Sync முகவரியை எந்த உபகரணத்தில் நீங்கள் உங்கள் கோப்புகளை சேமிக்க விரும்புகிறீர்களோ அதில் கொடுக்கவும்.
இனி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு படமும் உடனுக்குடன் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் சேமிக்கப்படும். (இணையம் மூலம்)





