Facebook Chat Bubbles உங்கள் கணினியில்

ஆண்டுராய்டு அலைபேசியில் Facebook Messenger பயன்படுத்துவோர் மிகவும் விரும்பக்கூடிய ஒரு அமைப்பு தான் Facebook - Chat Bubbles. CHAT Bubble என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு, Facebook Messenger இல் ஒரு முக்கிய அம்சமான இது, யாராவது உங்களுக்கு Facebookஇல் குறுஞ்செய்தி அனுப்பினால் நீங்கள் எந்த செயலியை(Application) பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் அந்த செயலியின் பயன்பாட்டிற்கு இடையூறு செய்யாமல் திரையில் Chat Bubble தோன்றும். இதன் மூலம் எந்த ஒரு தகவலையும் நீங்கள் தவற விட மாட்டீர்கள்.



இந்த Chat Bubble அம்சத்தை கணினியில் பெறுவது எப்படி? Chrome இணைய உலாவி மூலம் இந்த அம்சத்தை நாம் கணினியிலும் பெறலாம்.



உங்கள் கணினியில் Chrome இணைய உலாவி இருந்தால் அதனை திறக்கவும். இல்லை என்றால் அதனை இங்கு சென்று பதிவிறக்கம் செய்து நிறுவவும்.




அடுத்து Faces.im என்ற Google Chrome நீட்சியை (Extension) Chrome இல் நிறுவவும்.




இப்போது உங்கள் Chrome உலாவியின் மேல் வலது முனையில் படத்தில் உள்ளது போல இருக்கும்.



இதன் பயன்பாடு மிகவும் சுலபமானது. இந்த Faces.im ஐகானை சுட்டினால் ஒரு தனி ஜன்னலில் Facebook செய்திகள் திறக்கப்படும்



இந்த ஜன்னல் மூலம் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் செய்தி அனுப்பலாம். உங்களுக்கு யாரேனும் செய்திகள் அனுப்பினால் அது Chrome உலாவியின் வலது கீழ் பக்கத்தில் Chat Bubble வடிவத்தில் உங்களுக்கு தெரியப்படுத்தும்.



இதில் உங்கள் நண்பர்கள் அனுப்பிய செய்தியின் ஒரு சிறிய பகுதி காண்பிக்கப்படும், இந்த ஐகானை சுட்டினால் Facebook Messenger பக்கத்திற்கு உங்களை எடுத்து செல்லும். இனி எந்த தகவலையும் தவற விட மாட்டீர்கள்.

Posted Unknown on 7:00 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Facebook Chat Bubbles உங்கள் கணினியில்

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.