Firefox OS செயலிகளை Android இல் நிறுவுவது எப்படி

Mozilla நிறுவனத்தின் Firefox இணைய உலாவியின் பெயரில் அந்நிறுவனம் அலைபேசிகளுக்கான OS ஒன்றை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க WEB APPS எனப்படும் இணைய செயலிகளை கொண்டுள்ள இந்த OS இந்தியாவில் தனது OS கொண்ட அலைபேசிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதுவும் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்கு.

இந்த Firefox OS வருகிற வரை பொறுமை இல்லாமல் அதில் என்ன தான் இருக்கிறது என்று ஆர்வப்படுபவர்களுக்கு உங்கள் Android போனில் Firefox செயலிகளை நிறுவி பார்க்கும் வழிமுறை இதோ
Android இல் Play Store திறக்கவும். அதில் Firefox for Android என்பதை தேடவும். பின்னர் அதனை உங்கள் போனில் நிறுவவும்.

பின்னர் Firefox for Android செயலியில் Firefox Marketplace என்பதை திறக்கவும். இது Firefox OS இன் Play Store போன்றது. இங்கு சென்று உங்களுக்கு விருப்பமான செயலிகளை பதிவிறக்கம் செய்யுது நிறுவிக்கொள்ளலாம்.

நிறுவப்படும் செயலிகள் சாதாரண Android செயலிகளை போல் Launcher இல் தோன்றும். பின் தேவை இல்லாத செயலிகளை அலைபேசியில் இருந்து நீக்க, சாதாரண Android செயலிகளை நீக்கம் செய்வது எப்படியோ அதே முறையில் செய்யலாம்.

 Android, Apple போல Firefox OS -க்கு என்று அதிக அளவு செயலிகள் தற்பொழுது இல்லாவிட்டாலும் பல நல்ல செயலிகளும் இருக்கத்தான் செய்கின்றன. சென்று பயன்படுத்தி மகிழுங்கள்.

தரவிறக்கம் செய்ய:

Firefox for Android
Click / Scan








Firefox Marketplace
Click / Scan

Posted Unknown on 7:00 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Firefox OS செயலிகளை Android இல் நிறுவுவது எப்படி

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.