கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் கற்க வேண்டுமா?


கணினி நிரலாக்கத்தில் (Computer Programming) விருப்பமுள்ளவரா நீங்கள்? புதிகாக கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் கற்றுக்கொள்ள விருபுபவரா நீங்கள்? கற்றுக்கொள்ளும் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் போதும், மிக எளிதாக ப்ரோக்ராம்மிங் கற்றுக்கொள்ளலாம். ப்ரோக்ராம்மிங் கற்க சிறந்த இனையதள பக்கங்கள்.


 coursera.org
இணையம் மற்றும் மொபைல் மூலம் கல்வி பயிற்றுவிக்கும் இந்த தளத்தை பற்றி நாம் முன்பே நம் தளத்தில் பதிந்திருகின்றோம். பார்க்க.

w3schools.com
தொடக்க நிலை மற்றும் நாடு நிலையில் உள்ள ப்ரோக்ராம்மிங் மாணவர்களுக்கு இது ஏற்ற தளமாகும். இந்த தளத்தில் html, html5, css, asp, Ajax, JavaScript, php, jQuery போன்ற நிரல் மொழிகளை இந்த தளம் மூலம் கற்று கொள்ளலாம். வலை தள வடிவமைப்பாளர்களாக விரும்புபவர்களுக்கு இது ஏற்ற தளம்.

codeavengers.com
கணினி விளையாட்டுக்கள், செயலிகள் (Application), இணைய தள கட்டமைப்பு (Web Designing) போன்றவற்றை கற்க ஆர்வமுள்ளவராக இருந்தால் இந்த தளம் உங்களுக்கு. இந்த தளம் தொடக்க நிலையில் பயில்பவர்களுக்காக என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கற்றலை எளிமையாகவும், விளையாட்டாகவும் அனைத்து வயதினரும் பயிலும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

codeacademy.com
JavaScript, HTML/CSS, PHP, Python மற்றும் Ruby போன்ற நிரல் மொழிகளை கற்க இது மற்றொரு சிறந்த தளம். இது சிறந்த நவீன கற்றல் முறையை பயன்படுத்தி நிரல் மொழிகளை கற்றுவிக்கிறது.  இது தொடக்க நிலை மற்றும் நடுநிலை மாணவர்களுக்கு ஏற்ற தளமாகும்.

tutorialspoint.com
இது இணைய தல வடிவமைப்பு, மற்றும் Scrpting languages களுக்கான பயிற்றுவிக்கும் தளம். இன்றளவில் பயன்படுத்தப்படக்கூடிய அனைத்து நிரலாக்க மொழிகளுக்கான பயிற்சிகளும் இந்த தளத்தின் மூலம் வளங்கப்படுகின்றது. மேலும், காணொளிகள் மூலமாக காட்சி பயிற்சிகளும் DIP, OS, SEO, Telecom, DBMS, frameworks ஆகிய தளங்களிலும் கொடுக்கப்படுகின்றது. இங்கே பிரபலமான நிரலாக்க மொழிகளில் Java, C++, PHP, Python, Ruby, C#, Perl, VB.Net, ios இவற்றுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது.

msdn.microsoft.com
இது தொடக்கநிலையில் பயில்பவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் மைக்ரோசாப்ட் நிரலாக்க மொழிகளை பயில்வதற்கு சிறந்த தளம் இது.  இந்த தளத்தில் மாதிரி செயலிகள்(Applications), பயிற்சி வகுப்புகளும் கொடுக்கப்படுகின்றன.

lynda.com
இது இணைய கல்வி பயிற்றுவிக்கும் தளங்களிலேயே மிகவும் பழமை வாய்ந்ததது. இதில் அனைத்து பயிற்சிகளும் வீடியோக்கள் மூலம் தரபடுகின்றன. அதன் மூலம் கற்போர் எளிதாக கற்றுக்கொள்ள இது உதவுகிறது. இதில் நிரலாக்க மொழிகளோடு 3D Modelling, CAD, Photography ஆகியவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

Posted Unknown on 7:00 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் கற்க வேண்டுமா?

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.