ஃபேஸ்புக் தளத்தை திறக்காமல் அதில் உள்ள தகவல்களை பார்ப்பது எப்படி

ஃபேஸ்புக் தளத்தை திறந்தவுடன்  நம் அனைவரது கண்களும் Notification bar ஐ நோக்கி தான் போகும். யார் நமக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்கள், யார் நட்பு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று ஆர்வமுடன் பார்போம். சிலர் இதற்க்கு அடிமை ஆகியே விட்டார்கள் என்று கூட கூறலாம்.

தன்னை சுற்றி ஃபேஸ்புக்கில் என்ன நடக்கிறது என்று எப்போதும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தகவல்களை அறிய ஒரு வழியுண்டு.

இதற்க்கு நீங்கள் சிறிது ஃபேஸ்புக்கில் மூழ்க வேண்டும்.

முதலில் Notification icon ஐ கிளிக் செய்து பின் அதில் உள்ள See all என்பதை தேர்வு செய்யுங்கள்.



பின் Your Notification என்பதற்கு கீழே Get Notifications Via என்றொரு தேர்வு இருக்கும்


அதில் RSS என்பதை தேர்வு செய்தால் உங்கள் Notification அனைத்தும் RSS Feed வடிவில் கிடைக்கும். இதனை Feedly போன்ற செயலி (Application) மூலம் தெரிந்துகொள்ளலாம். இதில் உள்ள சிறப்பு ஒரே நேரத்தில் இது போல் எத்தனை கணக்குகளுக்கு வேண்டுமானாலும் செய்யலாம்.






இல்லை என்றால் உங்கள் அலைபேசிக்கு Notification அனைத்தையும் குறுஞ்செய்தி மூலம் பெறலாம். இதற்க்கு RSS என்பதை தேர்வு செய்த பின் அதே இடத்தில் Text Message என்று இருக்கும். அதை தேர்வு செய்ததும் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் பாஸ்வோர்ட் கேட்கப்படும். பின் உங்கள் நாடு, உங்கள் தொலைபேசி சேவை இரண்டையும் கொடுக்க வேண்டும். பின் அதில் வரும் கட்டளைக்கேற்ப செய்தால் உங்கள் மொபைலில் ஃபேஸ்புக் Notification குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

இனி அனைத்து தகவல்களும் உடனுக்குடன் உங்களின் பார்வைக்கு வந்துவிடும்.

Posted Unknown on 7:00 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for ஃபேஸ்புக் தளத்தை திறக்காமல் அதில் உள்ள தகவல்களை பார்ப்பது எப்படி

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.