கேம் ஆஃப் த்ரோன்ஸ் க்கு சவால் விடும் வெஸ்ட் வேர்ல்ட்
Feature 11:36 PM
ஜார்ஜ் ஆர்.ஆர்.
மார்டின் எழுதிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற புத்தகத்தை மையபப்டுத்தி HBO நாடகத் தொடரை வெளியிட்டது. இது பார்வையாளர்கள்
மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த வரவேர்ப்பினால் பார்வையாளர்களுக்கு
இன்னும் சுவாரஷ்யத்தை கூட்ட நாடகத்தின் திரைக்கதையை புத்தகத்தில் இருந்து
வேறுபடுத்தி HBO நிறுவனம் வெளியிட்டது. தற்போது இந்த கேம் ஆஃப்
த்ரோன்ஸ் நாடகத்திற்கு சவால் விடும் அளவில் புதிய தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது HBO.WEST WOLRLD என்ற இந்த தொடரில் ஜுராசிக் பார்க், ஹங்கர் கேம்ஸ், AI ஆகிய படங்களின் தாக்கம் வெகுவாக உள்ளது. தொழில்நுட்பத்தையும் கவ்பாய் ரக கதையமைப்பும் கொண்ட ஒரு கலவையான உலகம் வெஸ்ட் வேர்ல்ட். வீடியோ கேம் ஆடுவது போல பணம் இருப்பவர்கள் எந்த வித பின்விளைவுகளும் இல்லாமல் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு உலகத்தை ஒரு நிறுவனம் தயார் செய்கிறது.
இந்த தீம் பார்க்
உலகத்திற்கு மனிதர்கள் ஒரு ரயிலில் வந்து இறங்குகின்றனர். அவர்களை மகிழ்விக்க வித
விதமான கதையமைப்பு கொண்ட அனுபவங்கள் அங்கே காத்திருக்கின்றது. கொடிய வில்லன்களை
தேடி பிடிக்கும் கதாநாயகர்களாகவோ அல்லது கொடிய செயல்களை செய்யும் வில்லன்களாகவோ
மாறுவது இந்த தீம் பார்க்கிற்கு வருகை தருபவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
இந்த உலகத்தில் உள்ள அனைவரும் 3D பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்ட ரோபோக்கள். தங்களுக்கென பதிவு செய்யப்பட்ட ப்ரோகாம்களின் கட்டளைக்கேற்ப அவர்களது நடவடிக்கை இருக்கும். இந்த ரோபோக்கள் ஒருவருக்கொருவர் பாசம் செலுத்த முடியும், சண்டையிட்டுக் கொள்ள முடியும். ஆனால் இங்கு வருகை தரும் விருந்தாளிகளான மனிதர்களை இந்த ரோபோக்களால் ஒன்றும் செய்ய முடியாது. இந்நிலையில் இந்த ரோபோக்களின் மென்பொருள் மேம்பாடு ஒன்று சில குழப்பங்களை விளைவிக்கிறது என்று தொடங்குகிறது வெஸ்ட் வேர்ல்ட் தொடரின் கதை.

தாங்கள் ரோபோக்கள்
என்று அறியாமல் காதலில் விழும் ஜோடி, தாங்கள் இருப்பது ஒரு கற்பனை உலகம் என்று
கண்டறியும் ஒரு ரோபோ, வெஸ்ட் வேர்ல்ட் உலகில் ஏதோ ஒன்றை
தேடிச் செல்லும் ஒரு கொடூர மனிதன், இந்த
தீம் பார்க்கின் உண்மையான நோக்கம் வேறு ஏதோ ஒன்று என்று சந்தேகிக்கும் தொழிலாளி
என்று பல சுவாரஷ்யங்களுடன் இத்தொடரின் கதையமைப்பு துவங்குகிறது.
1973 இல் இதே பெயரில் வெளியான படத்தை மையமாக கொண்டு
எடுக்கப்பட்டதால் இதற்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த தொடரின் முதல் பாகம்
பார்வையாளர்கள் எதிர்பார்த்ததை விட அருமையாக உள்ளது என்றும் பலரும்
பாராட்டியுள்ளனர். பார்வையாளர்களின் ஆர்வத்தை இத்தொடர் தக்க வைத்துக்கொள்ளுமா
என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.