இந்தியாவுடன் நெருக்கமாகும் கூகிள்

Google for India என்ற நிகழ்ச்சியினை சமீபத்தில் கூகிள் நடத்தியிருந்தது. இதில் இந்தியாவிற்கென பல்வேறு விஷேச அறிவிப்புகளை கூகிள் வெளியிட்டிருந்தது. இந்திய சூழலில் பொதுவானதாக கருதப்படும் மோசமான இணையதள சேவையை தங்களது கூகிள் ஸ்டேஷன் எனப்படும் இலவச wifi மூலம் மேம்படுத்துவதாகட்டும், இத்தகைய சூழ்நிலையிலும் வீடியோ பிரியர்களான இந்தியர்களுக்கு விஷேஷ யூடியுப் செயலியை அறிமுகப்படுத்தியதாகட்டும் அனைத்திலும் இந்தியா தங்களுக்கு மிக முக்கியமானதொரு சந்தை என்பதை கூகிளும் உணர்ந்து கொண்டுள்ளது என்பது தெரியவருகிறது.

முன்னதாக இந்தியாவிற்கு என்று கூகிள் ஒன் அலைபேசிகளை அறிமுகப்படுத்தியது கூகிள். ஆனால் அது மைக்ரோமேக்ஸ், ஷியோமி, கார்பன் போன்ற நிறுவனங்களின் விலை குறைந்த அலைபேசிகளை தாண்டி வெற்றிபெற முடியவில்லை. தற்போது இந்தியாவில் தங்களது பலம் மென்பொருள் சேவைதான் என்பதை உணர்த்து கொண்ட கூகிள் அதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் சிறந்த ஒரு இணையதள சேவை இல்லாததின் வெற்றிடத்தை நிரப்ப கூகிளும் முயற்சித்து வருகிறது.

கூகிளின் Google Station திட்டத்தின் கீழ் 400 இந்திய ரயில்நிலையங்களில் இலவச wifi சேவையினை வழங்க திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் இது வரை 52 ரயில் நிலையங்களில் இலவச இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது என்று கூகிள் அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் 15000 புதிய வாடிக்கையாளர்களை கூகிள் ஸ்டேஷன் மூலம் இணையதளத்திற்கு அறிமுகப்படுத்துவதாக கூகிள் கூறியுள்ளது. 

அடுத்ததாக இந்தியாவிற்கென யுடியுப் கோ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள். அடிப்படையில் இருந்ததே இந்த செயலி இந்தியாவிற்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறியுள்ளது. இந்த செயலியின் மூலம் மோசமான இணைய இணைப்பிலும் தடையின்றி வீடியோக்களை காண முடியும். மேலும் இணைய இணைப்பை பயன்படுத்தாமல் நண்பர்களுடன் வீடியோக்களை பகிரும் வசதியையும் கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி இந்தியாவிற்கு மட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதனை பயன்படுத்த விருப்பமுள்ளவர்கள்
 youtubego.com/signup என்ற முகவரிக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூகிள் தெரிவித்துள்ளது.

கூகிள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அல்லோ (
Allo) செயலி இந்நிகழ்ச்சியில் கூகிளின் மற்றோர் அறிவிப்பு. தேடு பொறிகளை தாண்டி பயனாளர்களின் தகவல்களை சேகரிக்க சிறந்த வழி தகவல் பரிமாற்ற செயலிகள் என்பதை கூகிள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் நன்றே அறிந்து வைத்திருக்கின்றன. அந்த வகையில் தான் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் செயலி தகவல்களை ஃபேஸ்புக்குடன் இணைக்கப்போவதாக அறிவித்தது. தேடு பொறி சந்தையில் முதலிடத்தில் உள்ள கூகிள் இதனை தவற விடுமா என்ன. போட்டிக்கு தன் தரப்பில் இருந்து அல்லோ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது கூகிள். இந்த செயலியின் சிறப்பம்சம் கூகிள் அசிஸ்டன்ட் இத்துடன் இணைக்கப்பட்டது தான். தற்போது இந்த சேவை ஆங்கில மொழியில் மட்டுமே அறிமுகப் படுத்தப்பட்டிருந்தாலும் இவ்வருட இறுதிக்குள் ஹிந்தியிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்த உள்ளது கூகிள். இதன் மூலம் கூகிள் அசிஸ்டன்ட் உடனான உங்கள் உரையாடல் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ அலல்து ஹிங்கிளிஷ் என்ற ஹிந்தி ஆங்கில கலப்பிலோ இருக்கலாம் என்று கூகிள் தெரிவித்துள்ளது. 

இத்துடன் இணைய தளத்தை குறைவாக பயன்படுத்தும்
 Google Chrome செயலி மற்றும் Google News Lite  என்ற செயலிகளையும் இந்திய பயனாளர்களுக்கு கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.


Posted Unknown on 11:52 PM. Filed under , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for இந்தியாவுடன் நெருக்கமாகும் கூகிள்

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.