zbigz.com - Torrent கோப்புகளை நேரடியாக தரவிறக்கம் செய்ய

பொதுவாக Torrent கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் போது அதிக நேரம் எடுத்துகொள்ளும். இது வழமையாக நாம் பயன்படுத்தும் Bittorrent, uTorrent மென்பொருள் பயன்படுத்தி தரவிறக்கம் செய்யும்போது நிகழும். இந்த பதிவில் Torrent கோப்புகளை Download Manager மூலம் தரவிறக்கம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.



இந்த வசதியினை zbigz.com என்ற இணைய தளம் நமக்கு வழங்குகிறது.
முதலில் zbigz.com தளத்திற்கு செல்லுங்கள்.

அதில் உங்கள் .torrent கோப்பினை பதிவேற்றம் செய்யுங்கள் அல்லது உங்கள் கோப்பிற்கான magnet முகவரியை கொடுத்து  "Go" என்ற பொத்தானை அழுத்துங்கள்.


பின் அது உங்களுக்காக உங்கள் கோப்பினை தரவிறக்கம் செய்யும். அது முடிந்ததும் உங்கள் கோப்பு நீங்கள் தரவிறக்கம் செய்ய தயாராக காத்திருக்கும்.

உங்கள் கணினியில் IDM என்ற Internet Download Manager நிறுவி இருந்தால் உங்கள் தரவிறக்க வேகம் இன்னும் அதிகரிக்கும். இல்லை என்றால் உங்கள் இணைப்பின் வேகத்தை பொறுத்து கோப்புகள் தரவிறக்கம் செய்யப்படும்.

zbigz.com இன் இலவச சேவை மூலம் ஒரு கூடுதலாக 1Gb அளவிலான கோப்புகளை மட்டுமே தரவிறக்கம் செய்ய இயலும். அதற்கும் கூடுதல் அளவு கொண்ட கோப்புகளை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கட்டண செலுத்த வேண்டும்.

இதற்காக தனி மென்பொருள் எதையும் உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைத்தையும் இணையம் மூலமாகவே செய்யலாம்.

Posted Unknown on 7:00 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for zbigz.com - Torrent கோப்புகளை நேரடியாக தரவிறக்கம் செய்ய

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.