புகைப்படங்களை பகிரும்முன் GPS Tagsஇணை நீக்குங்கள்.

GPS Tag - இது ஒரு புகைப்படம் எந்த இடத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்பதனை அந்த புகைப்படத்தோடு சேர்த்து பதிவு செய்யும் செயல்பாடு. இது போன்று புகைப்படத்துடன் சேர்த்து பதிவிடப்படும் தகவல்களை EXIF Data என்று அழைப்பார்கள். பெரும்பாலும் இந்த GPS Tagging ஸ்மார்ட் அலைபேசிகளிலே செய்யப்படும். இதன் மூலம் நமது கடந்தகால நினைவுகளை ரசித்து பார்க்க உதவி செய்யும்.




நாம் சுற்றுலா செல்லும் போது இத்தகைய தகவல்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதே சமையம் நாம் நம் வீட்டிலிருந்து எடுக்கும் புகைப்படங்களில் அல்லது நம் அலுவலகம், நாம் அன்றாடம் செல்லும் இடங்களில் வைத்து எடுக்கப்படும் புகைப்படங்களில் நம் இருப்பிடத்தையும் சேர்த்து பதிவு செய்வதினால் நம்மை பிறர் பின் தொடர்வதற்கும், நம் இருப்பிடம், முகவரி போன்ற நம்மை குறித்த தனிப்பட்ட தகவல்களை நமக்கு தெரியாதவர்களும் காண முடியும்.


சாதாரணமாக ஒருவருக்கு நம் அலைபேசி எண்ணை கொடுக்க யோசிக்கும் நாம், அவர்களுக்கு நம் முகவரியையே இதன் மூலம் கொடுத்து விடுகின்றோம்.

இதை தவிர்ப்பது எப்படி?
முன்பே குறிப்பிட்டது போல இந்த தகவல்கள் அனைத்தும் EXIF (Exchangeable Image File) Data என்பதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் EXIF Data இருக்கும். இதில் அந்த புகைப்படம் எங்கு  எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது, எந்த கேமரா மூலம் எடுக்கப்பட்டது இன்னும் இதர தகவல்களும் அதில் பதிவாகி இருக்கும்.



விண்டோஸ் பயனாளர்கள் EXIF Data வை நீக்கம் செய்ய ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து Right Click > Properties செல்லுங்கள்.

அதில் Details பட்டையில் உள்ள Remove Properties and Personal Information என்பதை தேர்வு செய்தால் மற்றொரு ஜன்னல் திறக்கும். அதில் எந்தெந்த தகவல்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்வு செய்து OK பொத்தானை சுட்டினால் வேலை முடிந்தது.

ஆண்டுராய்டு பயனாளர்கள் Image Privacy என்னும் செயலி மூலம் Exif Data வை நீக்கலாம்.

இனி சமூக வலைதளங்களில் உங்கள் புகைப்படங்களை பகிரும் முன்னர் EXIF Data வை நீக்கம் செய்து புகைப்படங்களை பாதுகாப்பாக பகிருங்கள்.

Image Privacy:
Click / Scan


Posted Unknown on 7:00 AM. Filed under , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for புகைப்படங்களை பகிரும்முன் GPS Tagsஇணை நீக்குங்கள்.

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.