Wireless Network Watcher - Wireless Network திருட்டை கண்காணிக்க
Feature, PC, Security, Tips 7:00 AM
தங்களுடைய இணைய இணைப்பின் வேகம் குறைந்துள்ளதாக உணர்கிறீர்களா? யாரேனும் உங்கள் இணைப்பை திருடுகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளதா? Wireless Network Watcher உங்களின் இந்த கவலையை போக்கிவிடும்.Wireless Network Watcher ஒரு சிறிய மென்பொருள் உபகரணம். இது உங்கள் இணைய இணைப்பு வட்டத்தை முழுமையாக சோதனையிட்டு யார் யார் உங்கள் இணைப்பை பகிர்ந்துகொள்கிறார்கள் என்று தெரிவித்துவிடும்.
உங்கள் இணைப்பை பயன்படுதுபவரது IP Address, MAC Address, எந்த நிறுவனத்தின் Network Card, மற்றும் கணினியின் பெயர் இருந்தால் அதனையும் உங்களுக்கு தெரியப்படுத்திவிடும்.
இந்த தகவல்களை CSV/html/xml/text கோப்பு வடிவில் சேமித்து வைத்து கொள்ளவும் வசதிகள் உண்டு.
இது Windows 2000, XP, Server 2003/2008, Vista, Win7 மற்றும் Win 8 இல் நிறுவி பயன்படுத்த முடியும்.
இதை பதிவிறக்கம் செய்ய:
http://nirsoft.net/utils/wnetwatcher.zip






