Whatsapp இன் பாதுகாப்பான மாற்று மெசெஞ்சர் Telegram:


SMS காலங்கள் அழிந்து விட்டது. இது Whatsapp காலம். ஆனால் Whatsapp இல் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு அது பாதுகாப்பானதாக இல்லை என்பது தான். இன்றைய காலங்களில் நம் அனைத்து தகவல் பரிமாற்றங்களும் தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு துறைகளினால் மோப்பம் பிடிக்கப்படுகின்றன. பலர் தங்கள் தகவல் பரிமாற்றங்களில் அடுத்தவர் மூக்கை நுழைப்பதை விரும்புவதில்லை. அத்தகையவர்களுக்காக பல அப்ளிகேசன்கள் வந்தாலும் அதில் தனித்துவம் வாய்ந்தது இந்த Telegram.

Telegram தங்கள் சேவை மூலம் பரிமாறப்படும் தகவல்களை யாரேனும் Decrypt அல்லது அது என்ன தகவல் என்று கண்டறிய முடியும் என்று நிரூபித்தால் அவர்களுக்கு $200,000 டாலர்களை பரிசாக அளிப்பதாக கூறியுள்ளது.

http://telegram.org/crypto_contest

இதன் அம்சங்கள்:
இது Whatsapp போன்றதொரு மெசேஜிங் அப்ளிகேசன் தான் என்றாலும் இதில் சில சிறப்பம்சங்கள் உள்ளன. வேகம், பாதுகாப்பு, கிளவுட் சேமிப்பு, குரூப் சாட் வசதி, மற்றும் 1gb வரையிலான வீடியோக்களை கூட பரிமாறும் வசதி கொண்டது.

Whatsapp இன் விசுவாசிகள் இதற்கு மாற இது போதுமான காரணங்கள் என்றாலும் நம் நண்பர்கள் அனைவரும் இதில் இணையும்வரை இதுவும் மற்றொரு சாட்டிங் அப்ளிகேசன் தான்.

Telegram ஐ பதிவிறக்கம் செய்ய:

Iphone (Scan / Click)








Android (Scan / Click)








PC (Scan / Click)

Posted Unknown on 6:39 PM. Filed under , , , , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Whatsapp இன் பாதுகாப்பான மாற்று மெசெஞ்சர் Telegram:

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.