உங்கள் ஆண்டுராய்டு போன்கள் பாதுகாப்பாக உள்ளதா?

இன்று மொபைல் பயனாளர்களை இரு வகையாக பிரித்துவிடலாம். ஒன்று ஆப்பிள் பயனாளர்கள், மற்றொன்று ஆண்டுராய்டு பயனாளர்கள். ஆப்பிள் பயனாளர்களை விட ஆண்டுராய்டு பயனாளர்கள் இலவச மென்பொருள்களை விரும்புவோர் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த இலவசங்கள் சில நேரங்களில் நம்மை மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் கொண்டு விட்டுவிடும். 

இன்று எளிதாக கிடைக்க கூடிய ஹாக்கிங் மென்பொருள்களை கொண்டு உங்கள் மொபைல் போன்களை ஒட்டு கேட்க உளவு பார்க்க முடியும். இதற்க்கு நீங்கள் பெரிதாக ப்ரோக்ராம் செய்ய அறிந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு சில கிளிக்குகளை கொண்டு எந்த ஆண்டுராய்டு போன்களையும் உளவு பார்க்க முடியும். 

இன்று பிளே ஸ்டோரில் ஒரு சிறிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யும் மென்பொருளுக்கு பதிலாக நாம் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் இடத்திலிருந்து பதிவிறக்கம் செய்கின்றோம்.

இது போன்ற ஆண்டுராய்டு அப்ளிகேசன் உடன் டுரோஜான் வைரஸ் போன்ற வைரஸ் குறிப்புகளை எளிதாக இணைத்து உங்களிடம் கொடுத்து விடலாம். இதை அறியாமல் நாம் அந்த மென்பொருள்களை நம் போனில் நிறுவிய உடன் நம் போனில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஹாக்கர்களால் கண்காணிக்க முடியும். 

காண்க காணொளி:
https://www.youtube.com/watch?v=37CQRztbbok

எனவே இலவசமாக கிடைகிறது என்று பிளே ஸ்டோர் அல்லாத இடத்தில இருந்து பதிவிறக்கம் செய்த மென்பொருள்களை உங்கள் போனில் நிறுவுவதை தவிர்க்கவும். உங்கள் தகவல்களை பாதுகாக்கவும்

Posted Unknown on 6:42 PM. Filed under , , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for உங்கள் ஆண்டுராய்டு போன்கள் பாதுகாப்பாக உள்ளதா?

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.