Wechat அப்ளிகேசனை குறி வைக்கும் ஹாக்கர்கள்

Whatsapp இற்கு பிறகு அதிக பேர் பயன் படுத்தும் சாட் அப்ளிகேசன் ஒன்று உண்டு என்றால் அது WeChat தான். சீன அப்ளிகேசனான இதனை ட்ரோஜான் வைரஸ் மூலம் தாக்கி நம் அலைபேசியில் உள்ள வங்கி விபரங்களை ஹாக்கர்கள் திருடும் செய்தியை பிரபல Anti-Virus நிறுவனமான Kaspersky வெளியாக்கி உள்ளது.

355 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் இந்த அப்ளிகேசனை போல போலி அப்ளிகேசனை தயார் செய்து அதன் மூலம் தகவல்களை திருடுவதாக Kaspersky நிறுவனம் தெரிவித்துள்ளது.

Banker.AndroidOS.Basti.a என்ற பெயருடைய இந்த ட்ரோஜான் அச்சு அசல் WeChat அப்ளிகேசனை போலவே இருப்பதோடு மட்டுமல்லாமல் இதில் உள்ள வைரஸ் குறியீடுகளும் மறைக்கப்பட்டிருப்பதால் இதனை கண்டுபிடிப்பது சுலபமானது இல்லை.

 இந்த அப்ளிகேசனை பதிவு செய்ததும் நம் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, நம் கிரடிட் கார்ட் எண், போன்ற நம்மை குறித்த தகவல்களை நம்மிடமிருந்து பெறுகின்றது. அதனை பின் தன் எஜமானனுக்கு அனுப்புகிறது.

இந்த வகை வைரஸிற்கு இது வரை பல பேர் பலியாகி இருப்பதாக Kaspersky தெரிவித்துள்ளது.

இது போன்ற ஹாக்கர் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்க Play Store அல்லாத நம்பகத்தன்மை இல்லாத அப்ளிகேசன்களை உங்கள் மொபைலில் நிறுவுவதை தவிர்க்கவும்.

Posted Unknown on 10:48 AM. Filed under , , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Wechat அப்ளிகேசனை குறி வைக்கும் ஹாக்கர்கள்

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.