Proton Mail: பாதுகாப்பான மின்னஞ்சல் சேவை.
Feature, News, PC, Web 5:36 PM
NSAவின் உளவு வேலைகள் குறித்த தகவல்களை ஸ்னோடன் உலகத்திற்கு அம்பலப்டுத்தியதும் Encrypted சேவைகளுக்கான தேவைகள் அதிகமானது. சாட் செய்வதற்கு Chat secure, surespot, Telegram போன்ற பல சேவைகள் வந்துவிட்டாலும் பாதுகாப்பாக அதே சமயம் எளிமையாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான எந்த சேவையும் இது வரை இல்லை. இந்த சேவையினை வழங்கி வந்த Lavabit நிறுவனமும் அமெரிக்க அரசின் கெடுபிடிகளால் தங்கள் சேவையை நிறுத்திக் கொண்டது.
இந்த குறையினை போக்க ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம், ஹாவர்டு மற்றும் மசாசுசெட் பல்கலைகழக விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியதே இந்த Proton Mail. End to End encryption, அதாவது உங்கள் கணினியில் இருந்தே தகவல்கள் மறைக்கபட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனால் சர்வர்களில் நமது தகவல்களை யாரும் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் அர்த்தமற்ற தகவல்கள் தான் மிஞ்சும். மேலும் இந்த சர்வர்கள் சுவிட்சர்லாந்தை மையப்படுத்தி இயங்குவதால் இது அமெரிக்க சட்டத்திற்குள் அடங்காது. மேலும் சுவிட்சர்லாந்து தனி மனித சுதந்திரத்திற்கு மற்றும் தனி மனித அந்தரங்கங்களை பாதுகாப்பதில் சிறந்த நாடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். (நம் நாட்டு கருப்பு பணத்தை நினைவில் கொள்க). இந்த சேவை மூலம் நம் அந்தரங்கத்தில் ஊடுருவும் கண்களை தவிர்க்க இயலும்.
இந்த சேவை தற்பொழுது பீட்டா நிலையில் உள்ளது. இந்த சேவைக்கான ஆண்டுராய்டு மற்றும் ஐபோன் மென்பொருட்கள் சிலமாதங்களில் வர இருக்கின்றது. இந்த சேவையை பெற ஆர்வமுள்ளவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் மின்னஞ்சலை இப்போதே முன் பதிவு செய்து வையுங்கள்.
முகவரி:
https://protonmail.ch/