Toy Story படத்தை உருவாக்கிய Pixar - Renderman Software - இலவசமாக

Pixar நிறுவனத்தின் மிகசிறந்த இயங்குபட(Animation) மென்பொருளான Renderman மென்பொருளை தற்பொழுது இலவசமாக வெளியிட முன்வந்துள்ளது. இந்த இலவச சலுகை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் வணிகரீதியில் அல்லாத பயன்பாட்டுக்காக என்று Pixar நிறுவனம் அறிவித்துள்ளது.

மெகா ஹிட் அனிமேஷன் திரைப்படங்களான Incredibles,Toy Story, Cars, Wall-E, Monstres.Inc., போன்ற திரைப்படங்கள் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச மென்பொருளானது எந்தவித மாற்றமும் செய்யப்படாத எந்த கட்டுபாடுகளும் இல்லாத முழுமையான மென்பொருளாகும். (No Watermarks, No Time Limits)



அனிமேஷன் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாகும். இந்த மென்பொருளை வர்த்தக ரீதியில் பயன்படுத்த வேண்டும் என்றால் $495 டாலர்கள் கொடுத்து உரிமம் பெற வேண்டும். Renderman மென்பொருளை இலவசமாக பெற விரும்புவோர் கீழுள்ள முகவரியில் சென்று Educatinal RenderMan அல்லது Free Non-Commercial RenderMan என்பதை தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
http://renderman.pixar.com/view/purchase

Posted Unknown on 7:00 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Toy Story படத்தை உருவாக்கிய Pixar - Renderman Software - இலவசமாக

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.