Sandboxie - பாதுகாப்பில்லாத கணினி மென்பொருள் / கோப்புகளை பாதுகாப்பாக இயக்க
Feature, PC, Security, Tips 7:00 AM
என்னதான் நாம் கணினி பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்துபவராக இருந்தாலும் சில நேரங்களில் பாதுகாப்பில்லாத அல்லது சந்தேகமான மென்பொருள்களை நம் கணினியில் நிருவிவிடுவது உண்டு. மேலும் கணினியை செயலிழக்க செய்யும் வைரஸ் அதிகமாக பரவுவது, இனியதளம் மூலமாக வைரஸ் அடங்கிய கோப்புகளை தரவிறக்கம் செய்து நிறுவும் போது வைரஸ் அடங்கிய இணைய பக்கங்களை நாம் பார்வை இடும் போது
மின்னஞ்சல் மூலமாக வரும் லிங்க் களை திறக்கும் போது சில நேரங்களில், உங்கள் கணினியில் வைரஸ்கள் இருப்பதாக கூறி பாதுகாப்பு மென்பொருள் போல் தோற்றமளித்து ஏமாற்றும் வைரஸ்களினால்.
இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக மென்பொருள்களை பாதுகாப்பாக இயக்க ஒரு இடம் தான் இந்த Sandboxie.
Sandboxie என்பது நம் கணினியின் உள்ளே ஓர் மெய்நிகர் தளம் (Virtual Platform). இது கணினியை போன்று ஆனால் கணினியில் இருந்து தனித்து இருக்கும் ஒரு தளம். இங்கு நாம் மென்பொருள்களை நிறுவலாம். இயக்கி பார்க்கலாம். மாறுதல்கள் செய்யலாம். அனால் இது நம் உண்மையான கணினியின் கட்டமைப்பில் எந்த மாறுதலும் செய்யாது.
இதன் நன்மைகள்:
இது இணைய உலாவுதலை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. நீங்கள் பார்வையிடும் தளங்கள் மூலம் உங்கள் கணினி பாதிக்கப்படும் என்று அச்சம் கொள்ள தேவை இல்லை.
உங்கள் இணைய பயணம் முடிந்ததும் ஒரு சுட்டில்(Click) அத்தனை தகவலையும் அழித்து விடலாம்.
ஒரு வேலை நீங்கள் இயக்கிய மென்பொருள் மூலமாகவோ இல்லை நீங்கள் பார்வையிட்ட பக்கங்கள் மூலமாகவோ வைரஸ்கள் தாக்கினால் கவலை கொள்ள தேவை இல்லை. இந்த வைரஸ்கள் Sandbox ஐ விட்டு வெளியில் செல்ல முடியாது, மேலும் ஒரு சுட்டில் அனைத்தையும் அழித்து விடலாம்.
இது பாதுகாப்பாக இணையத்தை பார்வையிட ஏற்படுத்தப்பட்டாலும் மென்பொருள்களை சோதனையிடவும் நாம் இதனை பயன் படுத்தலாம்.
நிறுவுதல் மற்றும் பயன்பாடு:
அனைத்து மென்பொருள்களை நிறுவுவது போலவே இதையும் நிறுவலாம்.
இதனை இயக்க Sandboxie என்ற கணினி பயன்பட்டு சின்னத்தை (Icon) திறந்தால் போதும். கீழுள்ளவாறு ஒரு ஜன்னல் திறக்கும்.
பின் அதில்
Sandbox DefaultBox > Run Sandboxed
சென்று உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.
Sandboxie இல் ஜன்னல்கள் அனைத்தும் மஞ்சள் நிற ஓரம் கொண்டிருக்கும்.
இதில் நீங்கள் ப்ரோக்ராம்களை மூட வேண்டும் என்றால் எப்பொழுதும் போலவே மூடலாம்.
அனைத்து ப்ரோக்ராம்களையும் மொத்தமக மூட வேண்டும் என்றால்
Sanboxie > Right Click > Terminate all Programs
என்பதை தேர்வு செய்யவும்.
மேலும் அணைத்து தரவுகளையும் அழிக்க
Sandboxie > Right Click > Delete Contents
ஐ தேர்வு செய்யவும்.
காணொளி பயிற்சி:







