TOR - கைதுகளை தவிர்க்க / தகவல்களை பாதுகாக்க.
Feature, Security, Software, Web 7:00 AM
TOR என்றால் என்ன?
TOR என்பது வலை உலகில் எந்த வித தணிக்கைகளும் இல்லாமல் சுதந்திரமாக உலா வருவதற்காக உதவும் ஒரு மென்பொருள் தொகுப்பு. இந்த மென்பொருள் நீங்கள் எங்கிருந்து இணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதை மறைப்பதோடு அல்லாமல், நீங்கள் யார் என்பதற்கான அடையாளத்தையும் உங்களின் இணைய பயன்பாட்டையும் (அதாவது இணையத்தில் நீங்கள் பார்ப்பது என்ன என்பதையும்) மறைத்துவிடும். இது பல காலமாக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இருந்ததினால் இன்று மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் பாதுகாப்பு மென்பொருள் என்ற பெயரினை பெற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக இது ஒரு இலவசமான மென்பொருள் தொகுப்பு.
TOR எப்படி செயல்படுகிறது?
எளிமையாக சொல்வதென்றால் TOR உங்களின் தகவலை ஒரு வெங்காயம் போல பல்வேறு அடுக்காக மறையாக்கம் (Encryption) செய்கிறது. பின்னர் அந்த தரவை (Data) ஒவ்வொரு அடுக்காக கணினி தொடர்கள் (Relays) மூலம் உங்கள் இலக்கிற்கு அனுப்புகிறது. ஒவ்வொரு தொடரிலும் மறைவிலக்கம்(Decryption) செய்யப்பட்டு இறுதியில் உங்கள் தரவு பாதுகாப்பாக இலக்கை எட்டுகிறது.
சாதாரணமாக இணையத்தில் நாம் உலாவும் போது நம் தரவுகள் இலக்கை அடைவது எப்படி என்பதை விளக்கும் படம்.
TOR பயன்படுத்தி இணையத்தில் உலாவும் போது நம் தரவுகள் இலக்கை எப்படி அடைகின்றது என்பதை விளக்கும் படம்.
TOR மற்றும் HTTPS பயன்படுத்தி இணையத்தில் உலாவும் போது நம் தரவுகள் இலக்கை எப்படி அடைகின்றது என்பதை விளக்கும் படம்.
இந்த படங்கள் மூலம் உங்கள் தரவுகளை யார் யார் காண முடியும் என்பதனை அறிந்திருப்பீர்கள். பொதுவாக உங்கள் தரவுகள் அனைத்தும் இணைய விளம்பரதாரர்களுக்கும், ஹாக்கர்களும், அரசாங்க உளவு மற்றும் தணிக்கை குழுக்களும் எந்நேரமும் காணும் வண்ணம் அமைந்திருக்கிறது. உங்கள் தகவல்கள் தவறான கைகளுக்கு கிடைத்தால் அதன் விளைவு? மேலும் Tor மற்றும் HTTPS சேவையின் பாதுக்கப்பு எப்படி என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
TOR சேவையை பயன்படுத்துவது எப்படி?
TOR சேவையை பயன்படுத்த நீங்கள் முதலில் TOR மென்பொருள் தொகுப்பை பதிவிறக்கம் (Download) செய்ய வேண்டும். TOR ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்
இந்த மென்பொருள் தொகுப்பில் TOR மென்பொருளும் கூடவே Firefox இணைய
உலாவியும் இணைக்கப்பட்டிருக்கும். Start Tor Browser மூலம் Tor ஐ இயக்கலாம்.
Android அலைபேசிகளில் Tor ஐ இயக்க Orbot என்னும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
TOR சேவை எனக்கு முழுமையான பாத்துகப்பு வழங்குமா என்று கேட்பவர்களுக்கு...
அது உங்கள் பயன்பாட்டை பொறுத்தது.
TOR சேவையை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளன. அதனை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே உங்கள் அடையாளம் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
TOR இணைய உலாவியின் ஊடாக மட்டுமே இணையத்தை உலாவுங்கள்.
TOR உங்கள் ஒட்டுமொத்த கணினிக்கும் பாதுகாவலன் அல்ல. TOR உலாவி வழியாக செல்லும் தகவல் பரிமாற்றங்கள் மட்டுமே பாதுகாப்பானவை. மற்ற இணைய உலாவிகளை TOR உடன் பயன்படுத்துவது சிறந்ததல்ல.
TOR வழியாக Torrent பயன்படுத்தாதீர்கள்.
Torrent சேவை எப்பொழுதும் TOR ஊடாக தகவல்களை பரிமாரிகொள்வதில்லை. கூடவே உங்களது IP முகவரியும் Torrent மூலம் பரிமாறப்படும். இதன் மூலம் TOR இன் முக்கிய நோக்கமான அநாமதேய(Anonymous) இணைய பயன்பாடு என்பது தோற்றுவிடும்.
உட்பொருத்தி (Plugin) மற்றும் நீட்சி(Extension) பயன்பாட்டை தவிர்க்கவும்.
Flash, RealPlayer, Quicktime போன்ற உட்பொருத்தி மற்றும் நீட்சிகளை Tor இயல்புநிலையில் தவிர்க்கும். இது ஏனென்றால் இந்த நீட்சிகளில் சிறிது மாற்றம் செய்து உங்களின் அடையாளத்தை எளிதாக பெற முடியும். Flash இல்லை என்றால் YouTube காணொளிகள் இல்லை. இதற்கான ஒரு மாற்று HTML5 (இங்கே சுட்டவும்). இந்த முகவரியில் சென்றால் Flash உட்பொருத்தியை நிறுவாமலேயே YouTube காணொளிகளை காணலாம்.
இயன்றவரை இணையதளங்களை HTTPS (https://) பதிப்பில் திறக்கவும்.
Tor இன் உள்ளே உள்ள தகவல்கள் மறையாக்கம்(Encrypt) செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் Tor இல் இருந்து நீங்கள் காண விரும்பும் இணையதளம் வரை உள்ள தகவல்கள் பாதுகாப்பு இல்லாமல் செல்லும். இதை HTTPS பதிப்பில் இணைய தளங்களை பார்வை இடுவதன் மூலம் தவிர்க்கலாம்.
இயல்பாகவே TOR மென்பொருள் தொகுப்பில் HTTPS வாயிலாகவே அனைத்து முக்கிய இணையதளங்களும் திறக்கப்படும். இருந்தாலும் உங்கள் முகவரி பட்டையில் (Address Bar) இணையதள பெயருக்கு முன்னாள் https:// என்று இருக்கிறதா என்று சோதித்துகொள்ளுங்கள்.
TOR மூலமாக பதிவிறக்கம் செய்யும் தரவுகளை நீங்கள் இணைப்பில் (online) இருக்கும்போதே திறக்காதீர்கள்.
குறிப்பாக DOC மற்றும் PDF வகை தரவுகளை திறக்க வேண்டாம். அப்படி ஏதேனும் தரவுகளை நீங்கள் பார்வை இட வேண்டுமெனில் இணைய இணைப்பு இல்லாத கணினி மூலம் காணவும். அல்லது இணையம் தவிர்க்கப்பட்ட மெய்நிகர் (Virtual) கணினி மூலம் பார்வை இடவும்.
உங்கள் Gmail, Facebook கணக்குகளை TOR இன் உள் திறக்காதீர்கள்.
அப்படி திறந்தால் நீங்கள் எங்கிருந்து இணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று கண்டுபிடிக்க இயலாவிட்டாலும் உங்கள் Gmail மற்றும் Facebook கணக்குகள் மூலம் நீங்கள் யார் என்ற அடையாளம் தெரிந்துவிடும். (நீங்கள் திறக்கும் கணக்கு உங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டும்).
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் தணிக்கை இல்லா, கைது இல்லா, தகவல் திருட்டு இல்லா பாதுகாப்பான இணைய தளத்தை அனுபவிக்கலாம்.

![]() |
| Tor மற்றும் HTTPS பாதுகாப்பு இல்லாமல். |
TOR பயன்படுத்தி இணையத்தில் உலாவும் போது நம் தரவுகள் இலக்கை எப்படி அடைகின்றது என்பதை விளக்கும் படம்.
![]() |
| Tor பாதுகாப்புடன். |
TOR மற்றும் HTTPS பயன்படுத்தி இணையத்தில் உலாவும் போது நம் தரவுகள் இலக்கை எப்படி அடைகின்றது என்பதை விளக்கும் படம்.
![]() |
| Tor மற்றும் HTTPS பாதுகாப்புடன். |
இந்த படங்கள் மூலம் உங்கள் தரவுகளை யார் யார் காண முடியும் என்பதனை அறிந்திருப்பீர்கள். பொதுவாக உங்கள் தரவுகள் அனைத்தும் இணைய விளம்பரதாரர்களுக்கும், ஹாக்கர்களும், அரசாங்க உளவு மற்றும் தணிக்கை குழுக்களும் எந்நேரமும் காணும் வண்ணம் அமைந்திருக்கிறது. உங்கள் தகவல்கள் தவறான கைகளுக்கு கிடைத்தால் அதன் விளைவு? மேலும் Tor மற்றும் HTTPS சேவையின் பாதுக்கப்பு எப்படி என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
TOR சேவையை பயன்படுத்துவது எப்படி?
TOR சேவையை பயன்படுத்த நீங்கள் முதலில் TOR மென்பொருள் தொகுப்பை பதிவிறக்கம் (Download) செய்ய வேண்டும். TOR ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்
இந்த மென்பொருள் தொகுப்பில் TOR மென்பொருளும் கூடவே Firefox இணைய
![]() |
| Orbot for Android |
உலாவியும் இணைக்கப்பட்டிருக்கும். Start Tor Browser மூலம் Tor ஐ இயக்கலாம்.
Android அலைபேசிகளில் Tor ஐ இயக்க Orbot என்னும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
TOR சேவை எனக்கு முழுமையான பாத்துகப்பு வழங்குமா என்று கேட்பவர்களுக்கு...
அது உங்கள் பயன்பாட்டை பொறுத்தது.
TOR சேவையை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளன. அதனை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே உங்கள் அடையாளம் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
TOR இணைய உலாவியின் ஊடாக மட்டுமே இணையத்தை உலாவுங்கள்.
TOR உங்கள் ஒட்டுமொத்த கணினிக்கும் பாதுகாவலன் அல்ல. TOR உலாவி வழியாக செல்லும் தகவல் பரிமாற்றங்கள் மட்டுமே பாதுகாப்பானவை. மற்ற இணைய உலாவிகளை TOR உடன் பயன்படுத்துவது சிறந்ததல்ல.
TOR வழியாக Torrent பயன்படுத்தாதீர்கள்.
Torrent சேவை எப்பொழுதும் TOR ஊடாக தகவல்களை பரிமாரிகொள்வதில்லை. கூடவே உங்களது IP முகவரியும் Torrent மூலம் பரிமாறப்படும். இதன் மூலம் TOR இன் முக்கிய நோக்கமான அநாமதேய(Anonymous) இணைய பயன்பாடு என்பது தோற்றுவிடும்.
உட்பொருத்தி (Plugin) மற்றும் நீட்சி(Extension) பயன்பாட்டை தவிர்க்கவும்.
Flash, RealPlayer, Quicktime போன்ற உட்பொருத்தி மற்றும் நீட்சிகளை Tor இயல்புநிலையில் தவிர்க்கும். இது ஏனென்றால் இந்த நீட்சிகளில் சிறிது மாற்றம் செய்து உங்களின் அடையாளத்தை எளிதாக பெற முடியும். Flash இல்லை என்றால் YouTube காணொளிகள் இல்லை. இதற்கான ஒரு மாற்று HTML5 (இங்கே சுட்டவும்). இந்த முகவரியில் சென்றால் Flash உட்பொருத்தியை நிறுவாமலேயே YouTube காணொளிகளை காணலாம்.
இயன்றவரை இணையதளங்களை HTTPS (https://) பதிப்பில் திறக்கவும்.
Tor இன் உள்ளே உள்ள தகவல்கள் மறையாக்கம்(Encrypt) செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் Tor இல் இருந்து நீங்கள் காண விரும்பும் இணையதளம் வரை உள்ள தகவல்கள் பாதுகாப்பு இல்லாமல் செல்லும். இதை HTTPS பதிப்பில் இணைய தளங்களை பார்வை இடுவதன் மூலம் தவிர்க்கலாம்.
இயல்பாகவே TOR மென்பொருள் தொகுப்பில் HTTPS வாயிலாகவே அனைத்து முக்கிய இணையதளங்களும் திறக்கப்படும். இருந்தாலும் உங்கள் முகவரி பட்டையில் (Address Bar) இணையதள பெயருக்கு முன்னாள் https:// என்று இருக்கிறதா என்று சோதித்துகொள்ளுங்கள்.
TOR மூலமாக பதிவிறக்கம் செய்யும் தரவுகளை நீங்கள் இணைப்பில் (online) இருக்கும்போதே திறக்காதீர்கள்.
குறிப்பாக DOC மற்றும் PDF வகை தரவுகளை திறக்க வேண்டாம். அப்படி ஏதேனும் தரவுகளை நீங்கள் பார்வை இட வேண்டுமெனில் இணைய இணைப்பு இல்லாத கணினி மூலம் காணவும். அல்லது இணையம் தவிர்க்கப்பட்ட மெய்நிகர் (Virtual) கணினி மூலம் பார்வை இடவும்.
உங்கள் Gmail, Facebook கணக்குகளை TOR இன் உள் திறக்காதீர்கள்.
அப்படி திறந்தால் நீங்கள் எங்கிருந்து இணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று கண்டுபிடிக்க இயலாவிட்டாலும் உங்கள் Gmail மற்றும் Facebook கணக்குகள் மூலம் நீங்கள் யார் என்ற அடையாளம் தெரிந்துவிடும். (நீங்கள் திறக்கும் கணக்கு உங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டும்).
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் தணிக்கை இல்லா, கைது இல்லா, தகவல் திருட்டு இல்லா பாதுகாப்பான இணைய தளத்தை அனுபவிக்கலாம்.

How do I get in to the deep dark net
Regards
Tim Martine
crazyask.com