Boomerang - உங்கள் E-Mailகளை யார் புறக்கணிக்கிறார்கள் என்று அறிய வேண்டுமா?
Feature, Google, Tips 7:00 AM
அலுவலக விஷயமாகவோ அல்லது தனிப்பட்ட காரியங்களுக்காகவோ அன்றாடம் நீங்கள் பல மின்னஞ்சல்களை அனுப்புபவராக இருக்கலாம். ஆனால் அதில் வெகு சில மின்னஞ்சல்களுக்கே உங்களுக்கு பதில் வரும். பதில் வராத மின்னஞ்சல்களின் நிலை குறித்து உங்களுக்கு எந்த தகவலும் இருக்காது. அப்படியான நேரங்களில் உங்கள் மின்னஞ்சல்களை யார் திறக்கவில்லை என்று கண்டறிய வழிகள் இதோ.
Boomerang என்பது, Safari, Firefox மற்றும் Chrome இணைய உலாவிகளுக்கான சக்தி வாய்ந்த உட்பொருத்தி (Plugin). Boomerang மூலம் குறிப்பிட்ட நாட்களுக்கு திறக்கப்படாத உங்கள் மின்னஞ்சல்களை மீண்டும் உங்களுக்கே அனுப்ப செய்ய முடியும்.
இதனை பயன்படுத்துவது எப்படி?
முதலில் Boomerang உட்பொருத்தியை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும்.
இதை நிறுவ உங்களின் விருப்பமான இணைய உலாவி(Web Browser) மூலம் இந்த தளத்திற்கு சென்று, Install Now என்ற பொத்தானை சுட்டவும்(Click)

இனி Boomerang நிறுவப்பட்டு விடும். அதனை உறுதி செய்ய
Chrome: Windows -> Extensions
Firefox: Tools -> Add-ons -> Extensions
Safari: Safari -> Preferences -> Extensions
சென்று Boomerang இருக்கிறதா என்று பார்க்கவும்.

இனி ஒரு மின்னஞ்சல் உருவாக்கி அதில் Boomerangஐ பயன்படுத்த உங்கள் இணைய உலாவியை ஒரு முறை மூடிவிட்டு பின் திறக்கவும். பின் Gmail சென்று Compose ஐ சுட்டி புதிய மின்னஞ்சல் பக்கத்தை திறக்கவும். இப்போது புதிய மின்னஞ்சல் பக்கத்தின் கீழ் பகுதியில் படத்தில் உள்ளது போல Send Later என்றொரு பட்டியை காணலாம்.

இதில் Boomerang this என்பதை தேர்வு செய்து if not opened என்பதை தேர்வு செய்யுங்கள்.

அதன் பின் உங்கள் மின்னஞ்சலின் பெறுநர் உங்கள் மடலை திறக்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று தேர்வு செய்யவும். (பார்க்க படம்)

இனி திறக்கப்படாத உங்களின் அனைத்து மின்னஞ்சல்களும் Boomerang என்னும் கோப்புறையில்(Folder) சேமிக்கப்படும். இந்த கொப்புரையின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் Boomerang என்ற பெயரின் வலப்புறம் இருக்கும் அம்பு குறியை சுட்டி Edit என்பதினை தேர்வு செய்து உங்கள் விருப்ப தேர்வை பதிந்து கொள்ளலாம்.

Boomerangஇன் அனைத்து அம்சங்களும் ஒரு மாத காலத்திற்கு இலவசம். அதன் பின் ஒரு மாத காலத்திற்கு 10 மின்னஞ்சல்களை மாத்திரமே நீங்கள் Boomerang செய்ய இயலும். இல்லை என்றால் இதனை upgrade செய்ய வேண்டும்.