Android Lost - நீங்கள் விரும்பியவரை கண்காணிக்க / தொலைந்து போன ஃபோன்களை மீட்க.

தொலைந்து போன ஃபோன்களை கண்டுபிடிக்க இன்று ஏகப்பட்ட மென்பொருள்கள் உள்ளன. அந்த அனைத்து மென்பொருள்களையும் நீங்கள் உங்கள் ஃபோன் தொலைந்து போவதற்கு முன் உங்கள் ஃபோன்களில் நிறுவி இருக்க வேண்டும். இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த மென்பொருளின் பயன்பாடு உங்கள் ஃபோன் தொலைந்த பின் தான். அதுவரை இது பாட்டரியை உறிஞ்சிக்கொண்டு இருக்கும். இருந்தாலும் நாம் நம் பாதுகாப்பு கருதி அதனை நிறுவி இருப்போம்.

இந்த Android Lost மென்பொருளின் சிறப்பம்சமாக பல விஷயங்கள் இருந்தாலும், அதில் முதன்மையானது, இந்த மென்பொருளை உங்கள் ஃபோன் தொலைந்து போன பின்னால் கூட நிறுவி செயல்படுத்த முடியும்.

அவசியம்:
அது உங்கள் ஃபோன் ஆக இருக்க வேண்டும். அந்த ஃபோனை பதிவு செய்ய பயன்படுத்திய E-Mail முகவரி மற்றும் பாஸ்வோர்ட் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

செய்முறை:
1.போன் உங்களிடம் இருந்தால் கீழுள்ள முகவிரிக்கு சென்று அந்த அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.androidlost 
பின்பு அந்த அப்ளிகேசனை திறந்தாலே போதும்.

2. ஃபோன் உங்களிடம் இல்லை என்றால் மேல் கூறிய அப்ளிகேசனை நிறுவுவதற்கு முன் Google Play Store இல் உங்கள் E-Mail முகவரியை பயன் படுத்தி login செய்யுங்கள். பின் கீழுள்ள முகவரி சென்று அந்த அப்ளிகேசனை உங்கள் போனில் நிறுவுங்கள். இதன் பின் முதலில் கூறிய அப்ளிகேசனை நிறுவுங்கள். அவ்வளவுதான்.
https://play.google.com/store/apps/details?id=com.androidlost.jumpstart
(தொலைந்து போன உங்கள் ஃபோனில் இணைய வசதி இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும்)

3. இனி http://www.androidlost.com வலை தளத்திற்கு சென்று உங்கள் ஃபோனில் உள்ள ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் கொண்டு login செய்யுங்கள்.

4. பொறுமை காருங்கள்.

5. உங்கள் போனில் இந்த அப்ளிகேசன் இயக்கப்பட்டு விட்டால் Congratulations என்றொரு செய்தி வரும். இனி தொலைந்த உங்கள் ஃபோனை திரும்ப பெற நீங்கள் தயார்.

6. இனி www.androidlost.com தளத்தை மூடிவிட்டு மறுபடியும் login செய்யுங்கள்.

7. அதில் Controls பட்டியில் சென்று உங்களுக்கு தேவையான அம்சங்களை செயல் படுத்தலாம். உ.தா. உங்கள் போனில் இருந்து செய்யப்பட்ட அழைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றால் Controls>Call List அம்சத்தை செயல்படுத்துங்கள். நீங்கள் கேட்டுக்கொண்ட அழைப்பு பட்டியல் உங்களுக்கு அனுப்பப்படும். அதனை Logs பட்டியில் சென்று காணலாம்.

(குறிப்பு: Logs பட்டியில் உள்ள அனைத்து தகவல்களும் 7 நாட்களில் அழிக்கப்பட்டு விடும்).

இந்த அப்ளிகேசனின் அம்சங்களில் சில:
  • உங்கள் ஃபோனில் உள்ள, ஃபோனில் இருந்து அனுப்பட்ட, பெறப்பட்ட குறுந்தகவல்களை படிக்கலாம்.
  • உங்கள் ஃபோன் Silent Mode இல் இருந்தால் அதனை ஒலி எழுப்ப செய்யலாம்.
  • உங்கள் ஃபோன் எங்கிருக்கிறது என்று Map மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • உங்கள் ஃபோனை பாஸ்வோர்ட் கொண்டு பூட்டி விடலாம். உங்கள் ஃபோனில் உள்ள தகவல்களை முழுவதுமாக அழித்துவிடலாம்.
  • உங்கள் ஃபோனில் இருந்து அழைக்கப்பட்ட / பெறப்பட்ட தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ளலாம்.
  • உங்கள் ஃபோனின் கேமரா மூலம் படம் எடுக்க செய்து பார்க்கலாம். உங்கள் போனில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
  • இன்னும் ஏராளம்.

இந்த அம்சங்கள் தொலைந்து போன ஃபோனை தேட மட்டும் அல்லாது உங்கள் குழந்தைகளை(?) கண்காணிக்கவும் பயன்படுத்தலாம். பயன்பாடு உங்கள் விருப்பத்திற்கேற்ப...........

Posted Unknown on 7:00 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Android Lost - நீங்கள் விரும்பியவரை கண்காணிக்க / தொலைந்து போன ஃபோன்களை மீட்க.

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.