Mixlr - இணையத்தில் நேரடி ஒலிபரப்பு (Live Audio Broadcasting)



Mixlr என்பது ஒரு இணையதள ஒலிபரப்பு சேவை.இதன் மூலம் இசையோ அல்லது பேச்சையோ நாம் உலகெங்கிலும் நேரடி ஒலிபரப்பு செய்யலாம். (இலவசமாக ஒரு முறை 1மணி நேரமும், கட்டணங்களுக்கு ஏற்ப மூன்று மணி நேரம் முதல் கால வரையறை அற்ற கணக்குகளும் உண்டு)

இப்போது இந்த இலவச சேவையை பயன்படுத்தி நாம் எப்படி இணையத்தில் இலவச நேரடி ஒலிபரப்பு செய்வது என்பதை காண்போம்.

முதலில் கணக்கான Mixlr மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய இங்கு சுட்டவும்( Click)

மென்பொருளை நிறுவியதும் உங்கள் கணக்கை பயன்படுத்தி புகுபதிகை (Login) செய்யவும்.

நீங்கள் உங்கள் Facebook கணக்கை பயன்படுத்தி லாகின் செய்யலாம். அல்லது உங்கள் மின்னஞ்சல் மூலம் புது கணக்கு தொடங்கி அதன் மூலம் லாகின் செய்யலாம்.

அடுத்து உங்கள் ஒலி ஆதாரத்தை (Audio Source) தேர்வு செய்யவும்

ஒலிஆதாரமாக Playlist, External Source, Microphone என்று மூன்று தேர்வுகள் இருக்கும். இந்த மூன்றையும் தனித்தனியாக அல்லது ஒன்றாகவும் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

இதில் Playlist என்பது நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும் ஒரு ஒலி பட்டியல். அதன் மூலம் ஒலிபரப்பு செய்ய முதலில் Playlist ஐ தேர்வு செய்யுங்கள்.

பின் Open Playlist என்பதை தேர்வு செய்யுங்கள்

அதில் Add Sounds என்பதை தேர்வு செய்யுங்கள்.


பின்னர் உங்கள் விருப்பமான ஒலி வடிவ கோப்புக்களை தேர்வு செய்யுங்கள்.
தேர்வு செய்த கோப்புகளை உங்கள் விருப்பதிற்கேற்றவாறு வரிசை படுத்துங்கள்.
உங்கள் விருப்ப தேர்வினை ஒளிபரப்ப அல்லது நீக்க ஒரு வலது சுட்டின்(Right Click) மூலம் செய்யலாம்.
Mixing desk, soundflower channel, aggregate device போன்ற கூடுதல் வெளிப்புற (external) கருவிகள் மூலமாகவும் நீங்கள் ஒலிபரப்பு செய்யலாம் 
கீழுள்ள படத்தில் காண்பிப்பது போல் நீங்கள் உங்களுக்கான ஒலி ஆதாரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Microphone: இதன் மூலம் மற்ற ஒலி ஆதாரங்களுடன் உங்கள் குரலையும் சேர்த்து அல்லது மற்ற ஒலி ஆதாரங்களின் சப்தத்தை குறைத்து உங்கள் குரலை ஒலிபரப்பு செய்யலாம்.
இதனை செய்வதற்கு எந்த ஒலிவாங்கி மூலம் ஒலியை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்தால் போதுமானது.


உங்கள் ஒலிபரப்பு சரியாக இருக்கிறதா என்பதை Main Out என்ற பட்டையை பார்த்து அறிந்துகொள்ளலாம்.
உங்கள் ஒலிபரப்பிற்கு நீங்கள் தலைப்பும் கொடுக்கலாம். அதை செய்ய Settings பக்கத்திற்கு சென்று அதில் உங்கள் விருப்பமான தலைப்பை கொடுக்கவும்.
அனைத்தும் உங்கள் விருப்பபடி தேர்வு செய்த பின்னர் GO என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் நேரடி ஒலிபரப்பு தொடங்கிவிடும். உங்கள் ஒளிபரப்பை நிறுத்த Stop என்ற பொத்தானை அழுத்தவும்.

Posted Unknown on 11:07 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Mixlr - இணையத்தில் நேரடி ஒலிபரப்பு (Live Audio Broadcasting)

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.