Google Chrome: சில பயனுள்ள குறிப்புகள்



கூகிளின் Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள சில குறிப்புகள்.




இணைய பக்கங்களை PDF கோப்புகளாக சேமிக்க.
Google Chrome எந்த ஒரு உட்பொருத்தி(Add Ons) மற்றும் நீட்சி(Extension) இல்லாமல் இணைய பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றும் அம்சம் கொண்டுள்ளது. இதனை செய்ய Chrome இல் Ctrl+P பொத்தான்களை அழுத்துங்கள். அதன் பின் “Save as PDF” என்பதை தேர்வு செய்யுங்கள்.

உலாவியின் குறிப்பிட்ட இணையதள வரலாற்றை அழிக்க:

Google Chrome’s இணைய வரலாற்றில் (chrome://history) உங்கள் தேடல் வரலாற்றை தனித்தனியாக அழிக்கும் போது, ஒவ்வொன்றாக தேர்வு செய்யாமல் மொத்தமாக தேர்வு செய்ய வேண்டும் எனில் படத்தில் உள்ளது போல நீங்கள் அழிக்க விரும்பும் தேர்வுகளில் முதன்மையானத்தை தேர்வு செய்து பின் "Shift" பொத்தானை அழுத்தி உங்களின் கடைசி தேர்வை தேர்வு செய்தால் அது இரண்டுக்கும் நடுவில் உள்ளது தானாகவே தேர்வாகி விடும்.


Chrome இன் வேகத் தொய்வை தவிர்க்க:
பல மணி நேரம் Chrome பயன்படுத்தினால் சில நேரங்களில் வேகத்தொய்வு ஏற்படலாம். பெரும்பாலும் இது உலாவியை ஒரு முறை மூடிவிட்டு திறந்தால் சரி ஆகிவிடும். அப்படியும் இது சரியாக வில்லை என்றால்
Chrome > Tools> Task Manager
செல்லுங்கள்.
அதில் எந்த இணையத்தளம் அதிக திறனை பயன்படுத்துவது என்று கண்டறிந்து அதை மூடிவிட்டால் வேகத்தொய்வு சரியாகி விடும்.

உங்கள் கடவுச்சொல்லை அறிந்துகொள்ள:
நம்மில் பலர் இணைய உலாவிகளின் Remember Password என்ற அம்சத்தை பயன்படுத்துபவராக இருப்போம். இது நம் நேரத்தை சேமித்தாலும் சில நேரங்களில் நம் கடவுச்சொல்லை(Password) அதிக காலம் நாம் பயன்படுத்தாத காரணத்தினால் அதனை நாம் மறந்து போக வாய்ப்புகள் அதிகம். அப்படி மறந்துவிட்ட நம் கடவுச்சொல்லை கண்டறிய,


  • உங்களின் கடவுச்சொல் பகுதியை முதலில் தேர்வு செய்யுங்கள்.
  • பின் Right Click செய்து Inspect Element என்பதை தேர்வு செய்யுங்கள். 
  • படத்தில் உள்ளது போல ஒருபகுதி தோன்றும். அதில் "password" என்பதை தேர்வு செய்து அதை "text" என்று மாற்றுங்கள்.
  • உங்களின் கடவுச்சொல் சாதாரண எழுத்துக்களாக தெரியும். 
Chrome இன் முகவரி பட்டையில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப:வழக்கமாக ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் Gmail சென்று பின் Compose பொத்தானை அழுத்தி அதன் பின் யாருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரியை அடித்து தொடங்க வேண்டும். இதை வேறு ஒரு எளிய முறையில் செய்யலாம்.

Chrome இன் முகவரி பட்டையில் mailto: என்ற அடித்து மின்னஞ்சல் பெறுநரின் முகவரி அடித்தால் நேரடியாக Gmail இன் Compose பகுதிக்கு சென்று விடும், பெறுனர் முகவரியோடு.

உ.தா. mailto:recipient@domain.com
அதாவது
mailto:tamilkaninee@gmail.com

Chrome ஐ Media Player ஆக பயன்படுத்த:
உங்கள் கணினியில் உள்ள audio, videos, images, text, PDF கோப்புகளை வேறு எந்த மென்பொருளும் நிறுவாமல் Chromeஇன் மூலம் பயன்படுத்தலாம்.

இதற்கு அந்த கோப்புகளை Click& Drag செய்து Chrome இல் இட்டால் போதும்.

Chrome இன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க:பல இணையதளங்கள் Adobe Flash Player ஐ பயன்படுத்தும், அது உங்களுக்கு தேவை இல்லை என்றாலும் கூட. இது Chrome இன் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்.
இதனை தவிர்க்க Chrome > Settings சென்று அதன் கீழ் பகுதியில் Show advanced settings என்பதை தேர்வு செய்யுங்கள். பின் அதில் படத்தில் உள்ளது போன்று
Privacy > Content Settings > Plug-ins > Click to Play என்பதை தேர்வு செய்யுங்கள்.
இனி நீங்கள் அனுமதித்தாலே தவிர Adobe Flash Pluggin வேலை செய்யாது.
 

உங்கள் கணினியை அலைபேசி போல காட்டிக்கொள்ள:
உங்கள் இணையதளம் வேகம் குறைவானதாக இருந்தால் உங்கள் கணினியை அலைபேசி நிலையில் பயன் படுத்தலாம். அதற்கு Chrome இல்
Ctrl+Shift+I ஆகிய பொத்தான்களை சேர்த்து அழுத்தினால் Developer Tools திறக்கும். அதில் Emulation என்ற பட்டையில் User Agent என்பதை தேர்வு செய்து,

இதில் உங்களுக்கு விருப்பத்தை படத்தில் உள்ளது போன்று தேர்வு செய்யுங்கள். அதன் பின் அந்த பக்கத்தை புதுப்பித்தால் (Refresh) அது நீங்கள் தேர்வு செய்த நிலைக்கு மாறிவிடும்.
குறிப்பு: இதை செய்யும் பொது Screen மற்றும் Device emulation தேர்வு செய்யாமல் இருக்கப்பட வேண்டும்.

Google Cache ஐ பயன்படுத்துவது எப்படி:
Google Cache என்பது ஒரு இணைய தளத்தின் நகல் ஆகும். இது Google இன் Server களில் பதிவாகி இருக்கும். உங்களின் விருப்பமான தளம் தற்காலிகமாக முடங்கி இருந்தால் அதனை Google Cache மூலம் நீங்கள் காணலாம். அதற்கு Chrome இன் முகவரி பட்டையில் உங்கள் இணையதள முகவரிக்கு முன் "cache:" என்று இட்டு Enter பொத்தானை அழுத்தினால் உங்களை Google Cache பக்கத்திற்கு எடுத்து சென்றுவிடும்.

Posted Unknown on 7:00 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Google Chrome: சில பயனுள்ள குறிப்புகள்

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.