ஒட்டு கேட்கப்படும் வோடபோன் தொலைபேசி அழைப்புக்கள்.

400 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலைபேசி தொலைதொடர்பு நிறுவனமான வோடஃபோன் தங்கள் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை பல நாட்டு அரசாங்கங்கள் சட்ட ஒழுங்கு காரணங்களுக்காக ஒட்டு கேட்பதாக அறிவித்துள்ளது. மொத்தம் 29நாடுகளில் தன் சேவையை செய்யும் இந்த நிறுவனம் சில நாடுகள் எந்த வகை நீதிமன்ற ஆணைகளும் இல்லாமல் அந்த நாட்டு குடிமக்களின் தொலைபேசி அழைப்புகள் ஓட்டுகேட்கப் படுகின்றது என்று அறிவித்துள்ளது.
     இந்த நாடுகளின் பட்டியலாவது அல்பேனியா, எகிப்து, ஹங்கேரி, இந்தியா, மால்டா, கத்தார், ரோமானியா, தென் ஆப்ரிக்கா, மற்றும் துருக்கி என்று அது தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அலைபேசி ஓட்டுகேட்கபடுவது ஒன்றும் புதிதான விஷயம் என்றாலும், எந்த நீதிமன்ற ஆணைகளும் இல்லாமல் ஒட்டுகேட்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இருப்பது அதிர்ச்சியை தருகிறது.

வோடஃபோன் நிறுவனத்தின் அறிக்கைப்படி, தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்க இந்த அரசாங்கங்களின் வேண்டுகோளை நிராகரிப்பது சட்டவிரோதமாகவும் அந்த பகுதியில் தங்கள் நிறுவனத்தின் உரிமைகளை அந்த அரசாங்கங்களால் ரத்து செய்ய கூட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் கார்டியன் பத்திரிகை இது பற்றி கூறியதாவது, இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தில் வோடஃபோன் தனித்து இல்லை என்றும் இது போல் பல நிறுவங்கள் இது போன்ற அரசாங்க கெடுபிடிகளுக்கு பணிந்து நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.     
மேலும் ஒட்டுகேட்பு கருவிகள் இந்த நிறுவனகளின் தொலைதொடர்பு சுவிச்சுகளில் நேரடியாக பொருத்தப்பட்டுள்ளது என்றும் எந்நேரமும் யாருடைய அலைபேசி இணைப்பையும் கேட்கவும் பதிவு செய்யவும் முடியும் என்றும் கூறியுள்ளது.
தேசவிரோத சக்திகளின் பிடியில் இருந்து மக்களை காப்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும் அது பொதுமக்களின் அந்தரங்கங்களை ஊடுருவி பார்த்து தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. 

Posted Unknown on 10:30 AM. Filed under , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for ஒட்டு கேட்கப்படும் வோடபோன் தொலைபேசி அழைப்புக்கள்.

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.