ஆண்டுராய்டு ஃபோன்களின் பாஸ்வோர்ட் ஐ கண்டு பிடிப்பது எப்படி?
Android, Feature, Security, Tips 10:55 PM

ஆண்டுராய்டு ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்து விட்டாலும் அதை
பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்று பலர் அறியாமல் உள்ளனர். எந்த ஒரு பெரிய
தொழில்நுட்ப அறிவு இல்லாமலும் கூட Password Gesture கொண்டு
பாதுகாக்கப் பட்ட ஆண்டுராய்டு ஃபோன்களை யாராலும் திறந்துவிட முடியும்.
பெரும்பாலும் நம் ஃபோன்களின் திரை நம் கை விரல் ரேகைகளை பதிவு
செய்யும். அதனை நாம் பெரிதுபடுத்துவது இல்லை. அனால் நம் ஃபோன்களின் பாஸ்வோர்டை அது
காட்டிகொடுத்துவிடும் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இனி யாருடைய பாஸ்வோர்டையாவது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றால்
அவர் உதவியுடனேயே கண்டு பிடித்துவிடலாம்.
முதலில் அவர் ஃபோன்ஐ வாங்குங்கள். அதன் திரையினை நன்றாக துடையுங்கள்.
பின் மீண்டும் ஃபோன் ஐ லாக் செய்து அவர்களிடம் கொடுத்து திறந்து தருமாறு கேளுங்கள்.
அவர்கள் திறந்து தந்த போன்ஐ மறுபடியும் லாக் செய்தால் அவர்கள் பாஸ்வோர்ட் படத்தில் இருப்பது போல ஃபோன் திரையில் பதிவாகி இருக்கும். அவ்வளவு தான்.
இதில் இருந்து நம் ஃபோனை பாதுகாப்பது எப்படி?
முதலில் நம் ஃபோனில் Settings > Security > Screen
Security இல் Make Pattern Visible மற்றும் Make Password Vsible என்பது
தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால் அதனை தேர்வில் இருந்து நீக்கி விடுங்கள் (Unselect).
இது நீங்கள் ஃபோன் ஐ திறக்கும் போது மறைவாக பார்பவரின் கண்களில் இருந்து
உங்கள் பாஸ்வோர்டை காக்கும் வழிமுறையாகும்.
நம் கை விரல் ரேகைகளை பதியாத Matte Finish Screen Protector ஐ போனில்
பயன்படுத்தலாம்..
நாம் ஃபோன் ஐ திறந்த உடன் திரையினை நன்றாக துடைத்து பிறரிடம்
கொடுக்கலாம்.







