பேஸ்புக் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் குறுந்தகவல்களை படிக்கிறது!!!
Android, Facebook, Feature, Security 6:32 PM
ஆம். உண்மையாகவே. பேஸ்புக்கின் சமீபத்திய அப்டேட்டின் படி(ஜனவரி 27-2014) சில பெர்மிஷன்களை அது "நியூ" என்ற பெயரில் சேர்த்துள்ளது. அதில் ஒன்று தான் "தங்களின் குறுஞ்செய்திகளை படிக்க அனுமதி தருகிறீர்களா?" நாமும் வழக்கம் போல் கண்ணை மூடிக்கொண்டு "அக்சப்ட்" பொத்தானை அழுத்தி அதை நிறுவி விடுகிறோம். பெரும்பாலான சமூக வலைதளங்கள் விளம்பரம் மூலமாகவே சம்பாதிக்கின்றன.
நாம் எதை அதிகமாக விரும்புகிறோம், எழுதுகிறோம், பகிர்ந்து கொள்கிறோம் என்பதன் மூலம் அவர்கள் நம் பேஸ்புக்கின் முகப்பு தளத்தில் அது சம்மந்தமான விளம்பரங்களை வரச்செய்து லாபமடைகின்றனர். தற்போது அவர்களின் வேலை இன்னும் இலகுவாகிறது நமது குறுஞ்செய்திகளை படிப்பதன் மூலம். புதிய அப்டேட்டை நிறுவி நமது குறுஞ்செய்திகள் மற்றும் இன்னபிற செயல்களையும் அம்பலமாக்குவதும், நிறுவாமல் பழைய அப்டேட்டிலே நீடிப்பதும் தங்கள் கைகளிலேயே உள்ளது.






