Android - App Permission என்றால் என்ன?

Play Store இல் இருந்து செயலிகளை (Applications) நாம் பதிவிறக்கம் செய்யும் போது App Permissions என்று அடிக்கடி பார்ப்பதுண்டு. சிலர் ஒவ்வொரு செயலியும் என்னென்ன அனுமதிகளை (Permission) கோருகின்றது என்று பார்த்து அந்த செயலிகளை நிறுவுவார்கள். பலர் எதையுமே பார்ப்பதில்லை. நேரடியாக நிறுவி விடுவதுண்டு. அது ஏன் என்றால் அந்த செயலிகள் கோரும் அனுமதிகள் என்னவென்று தெரியாத காரணத்தால். இந்த அனுமதிகளை நாம் ஏன் கவனிக்க வேண்டும். அதன் முக்கியத்துவம் என்ன? பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் App Store ஐ ஒப்பிடும் போது Android இன் Play Store பாதுகாப்பு விஷயத்தில் சற்று பலகீனமானது. அதனால் நம் அலைபேசிகளுக்கு கெடுதல் விளைவிக்க கூடிய அல்லது நமக்கு தெரியாமல் நம் அலைபேசிகளில் இருந்து தகவல்களை திருட நேரிடலாம். சிலர் தங்கள் வங்கி கணக்கு விபரங்களை அதில் பதிவு செய்து வைத்திருக்க கூடும். அப்படியான சமயங்களில் உங்கள் பணமும் சேர்த்து திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இதனை எப்படி தவிர்ப்பது?

நாம் ஒவ்வொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யும் பொது அது கோரும் அனுமதிகள் என்னென்ன என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அந்த செயலிகளின் பயனுக்கு ஏற்ப அனுமதிகள் பொருந்தினால் அதனை பதிவிறக்கம் செய்யலாம். இல்லையேல் உங்கள் நலன் கருதி அதை தவிர்ப்பது சிறந்தது. இதற்கு நமக்கு ஒவ்வொரு அனுமதிகளை பற்றியும் அது எதற்காக என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் தெளிவு வேண்டும்.
இந்த பதிவில் பொதுவாக செயலிகள் கோரும் ஒவ்வொரு அனுமதிக்கும் (Permission) என்ன பொருள் என்று காண்போம்.

Modify, delete and read storage:
இது தரவுகளை உங்கள் அலைபேசியில் பதிய மற்றும் வாசிக்க பெறப்படும் அனுமதி. பெரும்பாலும் அனைத்து செயலிகளும் இந்த அனுமதியை கோரும். இதன் அனுமதியை வழங்குவது மூலம் உங்கள் அலைபேசியில் உள்ள புகைப்படங்கள், மற்றும் இசை கோப்புகள் உட்பட பல கோப்புகளையும் (Folder) குறிப்பிட்ட செயலி பயன்படுத்த இயலும்.

Find and use accounts on the device:
Google, Facebook, Twitter ஆகிய சேவைகளின் கணக்கு இணைய தளத்தில் மிகவும் இன்றியமையாதது ஆகிவிட்டது. விளையாட்டு போன்ற பல செயலிகள் உங்களது விளையாட்டு முடிவுகளை(Game Scores) இணையத்தில் பதிய இந்த அனுமதியை பெறக்கூடும். கூடுதலாக இந்த அனுமதியை பெரும் செயலிகள் மேற்கண்ட கணக்குகளில் அடங்கியிருக்கும் தகவல்களை அணுகவும் முடியும்.

Full network access:
இது செயலிகளுக்கு இணையதள இணைப்பு வழங்க பெறப்படும் அனுமதி. இது பெரும்பாலும் இணைய அரட்டை செய்ய பயன்படுத்தும் செயலிகளான ஃபேஸ்புக், கூகிள், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் கோரும் அனுமதியாகும். கூடவே சில விளையாட்டுகளும் தரவுகளை பதிவிறக்கம் செய்ய இந்த அனுமதியை கோரும். இதன் மறுபக்கம் என்னவென்றால் சந்தேகத்திற்கிடமான செயலிகள் இணையத்தை பயன் படுத்தி உங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

Phone status and identity:
இது உங்கள் அலைபேசியின் நிலை, அதாவது உங்களுக்கு அழைப்புகள் வருகின்றதா, நீங்கள் அழைப்பில் இருகின்றீர்களா என்பதை கணக்கிட்டு குறிப்பிட்ட செயலிகளின் பயன்பாட்டை தொடங்கவோ நிறுத்தவோ செய்ய இயலும். அதேசமயம் உங்கள் அலைபேசியுடைய IMEI, IMSI போன்ற முக்கிய தகவகளையும் இந்த அனுமதி மூலம் செயலிகள் பெற இயலும்.

Prevent phone from sleeping:
பொதுவாக நம் அலைபேசி உறங்கு நிலைக்கு (Sleep Mode) க்கு சென்று விட்டால் அது பல செயலிகளின் செயல்பாட்டை நிறுத்திவிடும். இது மின்கலத்தில் (Battery) உள்ள மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில செயலிகள் எல்லா நேரமும் இயங்கும் பொருட்டு இந்த அனுமதியை கோரும். உதாரணத்திற்கு  ஒரு காணொளியை காணும்போது உங்கள் அலைபேசி திரை அணைக்கப்படாது, காரணம் இந்த அனுமதியாகும்.

Read and send text messages:
இது பெரும்பாலும் அரட்டை செயலிகள் கோரும் அனுமதி ஆகும். உங்கள் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்களை குறிப்பிட்ட செயலிகளும் பெறுவதற்காக பயன்படும் அனுமதி இது. உதாரணம்: Go SmS Pro என்கிற செயலி குறுந்தகவல்களை அனுப்ப பயன்படும் ஒரு செயலி. இது இந்த அனுமதி மூலம் நம் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்களை அனுப்ப / பெற முடிகிறது.

Read your contacts:
இது பெயருக்கு ஏற்றார் போல உங்கள் அலைபேசியில் உள்ள உங்களின் தொடர்புகளை பயன்படுத்த பெறப்படும் அனுமதி. இது Google, Facebook, Twitter, Whatsapp, Wechat போன்ற செயலிகள் பொதுவாக பெறுவதுண்டு. இது மிகவும் முக்கியமானதொரு அனுமதியாகும். தேவை இல்லாத செயலிகளுக்கு இதனை தவிர்ப்பது சிறந்தது.

Sticky broadcasts:
இது ஒன்றுக்கும் மேற்பட்ட செயலிகள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள பெறப்படும் அனுமதி. Android பொறுத்தவரை ஒவ்வொரும் செயலியும் தனி தனி பயனர்கள்(Users). அதனால் அவைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் என்பதை சாத்தியபடுத்த இந்த அனுமதி உதவுகிறது. இது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பின்னணியில் இயக்கப்படும் செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் அனுமதி.

Location and Positioning:
இது நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதனை கண்டறிய உங்கள் அலைபேசியின் GPS கருவியை இயக்க தேவைப்படும் அனுமதி.

இன்னும் அதிகளவில் செயலிகளின் அனுமதிகள் இருந்தாலும் இவை பெரும்பான்மையாக செயலிகள் கோரும் அனுமதிகளாகும். இதில் சிறியது பெரியது என்று எதுவும் இல்லை. அனைத்து அனுமதிகளையும் அந்தந்த செயலிகளின் சேவைகளுக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே அந்த செயலிகளை பயன்படுத்துங்கள். இல்லை என்றால் உங்கள் தகவல்கள் திருடு போகவும் உங்களுக்கு இழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணம்:
Torch என்று ஒரு செயலி இருக்கிறது. இதற்கு இணைய இணைப்பு அவசியம் இல்லை. உங்கள் தொடர்புகளை(Contacts) படிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் இது போன்று அதற்கு தேவை இல்லாத அனுமதிகளை அது கோரும் பட்சத்தில் அது பாதுகாப்பான செயலி அல்ல. அதை நிறுவுவதை தவிர்க்கவும். பெரும்பாலும் செயலிகளின் இணைய இணைப்பை(Internet Connection) தவிர்த்தாலே உங்கள் அலைபேசி பாதுகாப்பானதாக இருக்கும். ஏனென்றால் ஒருவேளை பாதுகாப்பில்லாத செயலிகளை நிறுவினால் கூட இணையம் இல்லாமல் அது இயங்கு கட்டளைகளை பெறவோ அல்லது உங்கள் தகவல்களை பிறருக்கு அனுப்பவோ முடியாது.

இப்படி ஒரு செயலிக்கு குறிப்பிட்ட அனுமதிகளை மறுப்பது எப்படி?
Cyanogenmod, Miui போன்ற சில Android Rom கள் இதை தங்கள் Rom(கணினிகளின் OS போன்று இது Android ஃபோன்களின் OS என கூறலாம்) இன் அம்சங்களுள் ஒன்றாகவே வைத்திருகின்றார்கள். அதனை பயன்படுத்துவோருக்கு நேரடியாக விஷேச செயலிகளை நிறுவாமல் கூட எந்த ஒரு குறிப்பிட்ட செயலியின் எந்த அனுமதியையும் திரும்ப பெறவும்  கொடுக்கவும் முடியும்.
இயல்பு நிலையில்(By Default) Android செயலிகளின் இந்த அனுமதிகளை மறுக்கும் வசதி இல்லை. ஆனால் அதற்கான பல செயலிகள் இப்போது இருக்கின்றது.

உங்கள்அலைபேசியில் உள்ள செயலிகள் என்னென்ன அனுமதிகளை பெற்றுள்ளது என்பதை காண Settings > Apps > Permissions சென்று காணலாம். அல்லது Clueful Privacy Advisor என்ற செயலி மூலம் காணலாம்.


Clueful Privacy Advisor:
Click / Scan








Posted Unknown on 7:00 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Android - App Permission என்றால் என்ன?

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.