இணையதளங்கள் குறித்த அதிகபடியான தகவல்களை பெற
Education, Feature, Tips, Web 7:00 AM
குறிப்பிட்ட எந்த ஒரு இணையதளம் குறித்து மேலதிக தகவல்களை பெற விரும்புபவர்களுக்கு தேவையான கருவிகளின் பட்டியல் இதோ.
http://who.is/
ஒரு சில இணைய தளங்களை நாம் உலாவும்போது சில நேரங்களில் இதனை இயக்குபவர்கள் யார், எங்கிருந்து இயக்குகிறார்கள் என்ற எண்ணம் நம்முள் எழுவது உண்டு. அப்படி எந்த ஒரு இணைய தளத்தையும் அது யாருடையது, அவரின் தொடர்பு மின்னஞ்சல் முகவரி ஆகியவை பற்றிய தகவல் பெற விரும்புபவர்கள் இந்த சேவையை பயன் படுத்தலாம்.
http://www.ewhois.com/
Enchanced Whois என்பதற்கான சுருக்கம் தான் ewhois. இது ஒரு இணையதள உரிமையாளரின் மற்ற இணையதளங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் தளம்.
http://whoishostingthis.com/
இது குறிப்பிட்ட எந்த இணைய தளத்தையும் யார் எந்த நிறுவனத்தின் சேவையை மூலம் Host செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் அந்தந்த வலை தளங்கள் குறித்த புகார் அளிக்க இது பெரும் உதவியாக இருக்கும்.
http://www.popuri.us/
இது ஒரு தளம் Facebook, Twitter, Google+ போன்ற சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்று அறிந்து கொள்ள உதவும். கூடவே கூகிளின் இணையதள பக்கங்களின் தர வரிசையில் எந்த தரத்தில் இருக்கின்றது என்றும் தெரிவிக்கும்.
http://www.chillingeffects.org/copyright/search.cgi
எந்த ஒரு இணைய தளமும் காப்புரிமையை மீறி விட்டால் அதை பற்றிய தகவல்கள் Chilling Effects தரவு தளத்தில் சேமிக்கப்படும். அப்படியான தரவுகளை எந்த இணைய தளம் குறித்தும் தெரிந்து கொள்ள உதவும் தளம் இது.
http://myip.ms/
இது ஒரு இணையதளம் அல்லது அதன் IP முகவரியின் Host Provider யார், அது எந்த இடத்தில் இயங்குகிறது, அண்ட் வலைதளத்தின் வரலாறு மற்றும் அதன் IP முகவரி மாற்றம் குறித்த விரிவான தகவல்களை இந்த தளம் மூலம் பெற்று கொள்ளலாம். இதே வசதியை Netcraft தளமும் தருகிறது.
http://toolbar.netcraft.com/site_report?url="நீங்கள் தேட விரும்பும் தளம்"
(" "இல்லாமல் தளத்தின் முகவரியை இடவும்)






