கணினி கவனி-1

இன்று நம் வாழ்க்கையில் கணினி மற்றும் கைப்பேசி மிகவும் இன்றியமையாததாகி விட்டது. மனிதனின் ஐந்தறிவுகளில் ஆறாம் அறிவாய் இவை மாறிவிட்டன. பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளை நொடிகளில் இணைக்கும் இணைப்பு பாலமாய் இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுவிட்டது. ஆயினும் இவற்றின் பயன்களுடன் நமக்கு பயமும் இருக்கவே செய்கிறது. தொழில்நுட்பம் வளர வளர நம் திறன்கள் குறைந்து கொண்டே வருகின்றது. முன்பொருகாலத்தில் நம் உறவினர் மற்றும் நண்பர்களின் தொலைபேசி எண்களை மனதில் பதிந்திருந்த நாம் இன்று நமது தொலைபேசி எண்களை தொலைபேசியில் தேடுகிறோம். அவசர உதவி தேவைப்படும் சமயங்களில் அலைபேசி செயல் இழந்து விட்டால் செய்வதறியாது தினறுகின்றோம். இப்படி நாம் தொழில்நுட்ப வளர்ச்சியினால் முட்டாள்களாகி இருக்கும் வேலையில் மற்றும் ஒரு ஆபத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. இதில் பெரும்பாலானோர் சிக்கி விடுகின்றனர், மிகவும் சொற்பமானவர்கள் தப்பித்து விடுகின்றனர். அது தான் தகவல் திருட்டு (Hacking).

நம்மில் பலருக்கு தகவல் திருட்டு என்பது ஒரு பெரிய விஷயமாகவே தெரிவதில்லை. அதில் என்ன இருக்கிறது. காசா? பணமா? போகட்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம். ஆனால் நிதர்சனத்தில் காசு பணத்தை விட சக்தி வாய்ந்தது இந்த தகவல். எப்படி?

ஒரு உதாரணம். இன்று நம்மில் பலருக்கு நாம் இருக்கும் இடத்தின் முகவரி தெரியுமோ இல்லையோ, ஆனால் இணையதள மின்னஞ்சல் முகவரிகள் இரண்டிற்க்கும் மேலாகவே தெரிந்திருக்கும்.

இந்த மின்னஞ்சல் சேவை ஆரம்ப காலத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் போன்றே செயல்பட்டது. 2002 ஆம் ஆண்டு மின்னஞ்சல் சேவையில் பிரதான இடத்தை பிடித்திருந்த Yahoo நிறுவனம் ஒரு வருட மின்னஞ்சல் சேவையின் கட்டணமாக $29.99 டாலர்களை வசூலித்தது. பின்னர் அதை 2002 நவம்பரில் YahooMail Plus என்ற கட்டண சேவை அறிமுகமானது. இதில் பயனர்களுக்கு 25 MB அளவிலான அஞ்சல் சேமிப்பு வழங்கப்பட்டது. ஒரு மின்னஞ்சலில் 10MB அளவிலான தகவல்களை அனுப்பலாம். இது போல் இன்னும் சில வசதிகள் கொண்ட சேவையாக அது செயல்பட்டது. இது ஒரு வியாபாரம். ஆனால் இந்த வியாபாரத்தை புரட்டி போட்டது ஒரு நிறுவனம். அதுதான் கூகிள்.

மற்ற எல்லா நிறுவனங்களும் கட்டணதிற்க்காக மிகவும் சொர்ப்பமான சேவைகளை வழங்கும் போது கூகிள் April 1, 2004 இல் தனது இலவச மின்னஞ்சல் சேவையினை அறிமுக படுத்தியது. அதிலும் இந்த சேவையில் 1GB அளவிலான மின்னஞ்சல் சேமிப்பு இடத்தினை வழங்கியது. இதனை தொடர்ந்து Yahoo, Hotmail, இன்னும் பல மின்னஞ்சல் சேவை நிறுவனங்கள் தங்கள் பயானாளர்களின் மின்னஞ்சல் பதிவு இடத்தை அதிகப்படுத்தினர். ஆனால் Gmail சேவையினை ஈடு கொடுக்க முடியவில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அனைத்து நிறுவனங்களும் கட்டண சேவை வழங்கும்பொழுது Gmail மட்டும் எப்படி இலவச சேவை வழங்கியது? “இந்த உலகத்தில் எதுவுமே இலவசம் இல்லை” Gmail கூட அப்படித்தான், அது தன் பயனாளர்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்க்குப் பதில் அவர்களின் தகவல்களை பெற்றது. அதன் மூலம் விளம்பரம் செய்ய தொடங்கியது. தனது பயனாளர்களின் தகவல்களை விற்க்கவும் தொடங்கியது. இப்பொழுது புரிகின்றதா உங்கள் தகவலின் மதிப்பு எவ்வளவு என்று. 25 MB கட்டண சேவையாக இருக்கும்போது உங்கள் தகவல் 1200MB யினை இலவசமாக்கியது. நம்ப முடியவில்லையா? Gmail கணக்கு வைத்திருப்பவர்கள் உங்கள் இன்பாக்ஸின் வலது புறம் உள்ள விளம்பர பக்கத்தினை கவனித்ததுண்டா? அதில் உங்களுக்கு வந்திருந்த அல்லது நீங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இடம் பெற்றிருக்கும் தகவலுக்கு தொடர்புடையதாக இருக்கும். இன்னும் ஒரு படி மேலே போய் நீங்கள் பயன்படுத்தும் இணைய பக்கங்களை எல்லாம் அது நோட்டமிடும். கூகிள் ஐ பயன்படுத்தும் பயனாளர் ஒரு பொறியாளராக இருந்தால் அவர் செய்திகள் வாசித்து கொண்டிருக்கும் பக்கங்களில் பொறியாளர் தேவை என்றோ அல்லது பொறியியல் மேற்படிப்பு என்றோ விளம்பரம் இருக்கும்.

இது எப்படி சாத்தியம்? கூகிளிடம் தனது சேவையினை பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரைப் பற்றிய சுயவிவரம் (Profile) ஒன்று இருக்கும். அதில் நீங்கள் யார்? உங்களுக்கு எத்தனை கணக்குகள் உள்ளன? உங்கள் தகவல் தொடர்பு, உங்கள் அலுவலகம் அல்லது உங்கள் பணி பற்றிய விபரம், உங்களது விருப்பம், பொழுது போக்கு இன்னும் பல தகவல் இடம்பெற்று இருக்கும். ஒரு சொல் ஒன்று உண்டு, "உன் நண்பனை பற்றி கூறு, நான் உன்னை பற்றி கூறுகிறேன்" என்று. இன்று இதில் ஒரு சிறிய மாற்றம், உன் கூகிள் கணக்கு விபரத்தை கூறு, நான் உன்னை பற்றி கூறுகிறேன் என்று கூறிவிடலாம். ஏன், பெற்றவர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியாத உங்களை பற்றிய தகவல்களை கூகிள் தெரிந்து வைத்திருக்கும்.

ஒரு சிறிய செய்முறை:
------------------------------------
முதலில் உங்களுடைய கூகிள் கணக்கினை திரந்து வையுங்கள். பின் புதியதொரு Tab-ஐ திறக்கவும். அதில்www.google.com/historyஎன்று அடித்து Enter பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது உங்களுடைய இணைய தள தேடல்கள், youtube வீடியோ தேடல்கள் மற்றும் நீங்கள் பார்த்த இணையதள முகவரிகள் அனைத்தும் பதிவாகி இருக்கும். இது Transparent profiling. இதில் உங்களை குறித்து கூகிள் பதிந்து வைத்துள்ள தகவல் நீங்களும் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

இது அல்லாத மற்றொரு Profiling-ம் உண்டு. அதனை உங்களின் “Recommended” பக்கத்தில் காணலாம். உங்கள் விருப்பத்தை அறிந்து கூகிள் உங்களுக்காக தரும் தகவல்கள். மேல் சொன்ன Transparent Profiling ஐ நாம் செயலிழக்க செய்யலாம். ஆனால் இரண்டாவதாக குறிப்பிட்டதை நம்மால் செயலிழக்க செய்ய முடியாது. இந்த Recommended பக்கங்கள் உங்களை சில நேரங்களில் தர்ம சங்கடமான நிலமையில் சிக்கி விடக்கூடும். ஒரு அலுவலகத்தில் இருந்து நீங்க பணி புரியும் போதே மற்ற வேலைகளை தேடலாம். அந்த சமையத்தில் உங்கள் மேலாளர் உங்கள் கணக்கையோ அல்லது நீங்கள் உங்கள் கணக்கை பார்க்கும் பொழுது உங்கள் கணினியையோ பார்க்க நேர்ந்தால் உங்கள் குட்டு வெளிபட்டு விடும். குழந்தைக்களிடம் நன்னெறி போதிக்கும் நாம் தேவையற்ற பக்கங்களை பார்போமையானால் சில நல்ல விஷயங்களை கணினி மூலம் குழந்தைகளிடம் விளக்கும் போது நமது மானமும் சேர்ந்தே போகும்.

இனி இது போன்ற Profiling ஐ தடுக்க சில வழிகள்.

>>>>> நாம் கூகிளில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் மின்னஞ்சல்களை வாசிக்கும் நேரம், மற்றும் நமது கணக்கு சார்ந்த பயன்பாடுகள் செய்யும் நேரம் தவிர அனைத்து நேரங்களிலும் நமது கணக்கினை Sign Out செய்து விட வேண்டும். நீங்கள் உங்கள் கணக்கினை பயன் படுத்தும் சமயம் Browser இல் உள்ள Cookies களை கூகிள் சேமிக்கின்றது. நம் கணக்குகளை பயன்படுத்தும் போது Private Browsing அம்சத்தினை பயன்படுத்துவது சிறந்தது. இது நாம் பயன்படுத்தும் Browser வைத்து மாறுபடும்.

>>>>> Google Chrome பயன்படுத்துபவர்கள் தங்கள் Browser திறந்ததும் Ctrl+Shift+n type செய்தால் புதிய ஜன்னல் திறக்கப்படும். அதில் மேல் இடப்பக்க ஓரத்தில் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்த ஒரு தலையின் படம் இருக்கும். இன்னும் அந்த ஜன்னலில்
“You've gone incognito. Pages you view in this window won't appear in your browser history or search history, and they won't leave other traces, like cookies, on your computer after you close all open incognito windows. Any files you download or bookmarks you create will be preserved, however. “
என்ற செய்தி இருக்கும்.

>>>>> Mozilla பயன்படுத்துபவர்கள் Mozilla Browser திறந்ததும் Ctrl+Shift+p என்று type செய்தால் தனி ஜன்னல் ஒன்று திறக்கும். அதில்
“Private Browsing, Firefox won't remember any history for this window.”
என்று இருக்கும்.
இப்படி இருந்தால் இதில் செய்யும் அனைத்து Browsing களும் அந்த ஜன்னல் மூடும் போதே அழிக்கப்பட்டுவிடும். ஆனாலும் அதே Window வில் வேறு Tabல் செய்யும் Browsing நம் கணக்கோடு சேர்க்கப்படும்.

>>>>> மேலும்,பெரும்பாலும் எல்லா கணினியிலும் இரண்டிற்க்கும் மேல் Browser கள் இருக்கும். இந்த இரண்டு Browser முறையை நாம் இணய தளத்தில் உலாவும் போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு Browser ஐ உங்களுடைய E-Mail கணக்கு மற்றும் Facebook கணக்குகளை பயன்படுத்த வைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு Browser ஐ இணைய தளத்தில் உலாவ பயன்படுத்துங்கள். உங்கள் Google மற்றும் Facebook கணக்குகளை பயன்படுத்தும்போது அதே Browser-ல் இருந்து மற்ற இணையதள பக்கங்கங்களை பார்வையிட்டால் Facebook, Google போன்ற இணைய தளங்கள் அதனை பதிவு செய்து வைத்துக்கொள்ளும். அதே போல் நாம் தேவையற்ற பக்கங்களை பார்ப்பதை விட்டு தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தான் மக்கள் பெரும்பாலும் சிக்கிக்கொள்கின்றனர்.

உதாரணத்திற்கு:

Facebook இல் நமக்கு மிகவும் தெரிந்த அல்லது நெருங்கிய ஒருவரின் சுவற்றில் ஒரு பதிவு இருக்கும். “இந்த பெண் செய்த காரியத்தை பாருங்கள்” அல்லது “இந்த வீடியோ வெளியானதால் இந்த பெண் தற்கொலை செய்து கொண்டால்” அப்படி இப்படி என்று ஏதாவது ஒரு வாசகமிட்டு ஒரு பதிவு. இது போன்ற பதிவுகளின் தலைப்புகள் முழு தகவலை தராமலும், அதே சமையத்தில் நம் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைந்திருக்கும். பெரும்பாலும் இது போன்ற பதிவுகளை தவிர்ப்பவராக நாம் இருந்தாலும் கூட நமக்கு மிகவும் பரிச்சயமான ஒருவரிடத்தில் இருந்து இது போன்ற பதிவுகள் வரும்பொழுது நாம் அதனை திறந்து பார்ப்போம். அப்படி திறந்தால், அடுத்து நம் கணக்கிலிருந்து இது போன்ற பதிவுகள் செல்ல தொடங்கி விடும். நம் கணக்கு Hack செய்யப்பட்டு விடும்.

அதைப்போல நம் நண்பர் ஒருவரின் கணக்கிலிருந்து Chat message மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஒரு இணையதள லிங்க் ஒன்று வந்திருக்கும். அந்த லிங்க் எது சம்பந்தமானது என்ற குறிப்புகள் எதுவும் இருக்காது. இது நமக்கு தெரியவதாவரிடம் இருந்து வந்திருந்தால் நாம் அதனை அலட்சியபடுத்தி இருப்போம், ஆனால் நம் நண்பர்களிடமிருந்தோ அல்லது குடும்பதினரிடமிருந்து வரும்போது நாம் அதனை திறந்து பார்க்க அதிக சாத்தியக்கூறுகள் உண்டு. அப்படி திறந்தால் நமது கணக்கு ஹாக் செய்யப்பட வாய்புகள் அதிகம். 

பொதுவாக யார் உங்களுக்கு இணையத்தில் எந்த செய்தி அனுப்பினாலும் அனுப்பியவரின் பெயரை மட்டுமே பார்த்து இவர் தான் இந்த செய்தியினை அனுப்பியிருக்க வேண்டும் என்று முடிவு செய்து விடக்கூடாது. முடிந்தால் சம்பந்தப்பட்ட link களை திறக்கும் முன் அந்த நபருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்து உறுதி செய்து கொள்ளுங்கள். முடியவில்லை என்றால் அவருடன் chat செய்து உறுதி செய்து கொள்ளுங்கள். chat செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் அடுத்தவர் chat செய்யும் முறை. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பேச்சு வழக்கு இருக்கும். நாம் chat செய்யும் முறை கூட அப்படி தான். Chat செய்பவர் அவரது பேச்சு வழக்கில் chat செய்யாமல் வேறு விதமாக செய்தால் நாம் சுதாரித்துக் கொள்வது சிறந்தது. 

தொடரும்......

Posted Unknown on 6:47 PM. Filed under , , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for கணினி கவனி-1

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.