செய்தியாளராக விரும்புபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக StoryMaker

செய்தியாளராக விரும்புபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக StoryMaker

இன்றைய ட்விட்டர், பேஸ்புக் காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு செய்தியாளர் தான். நாம் ட்விட்டர், பேஸ்புக்கில் பகிரும் செய்திகளை தொழில் சார்ந்த செய்தியாளர்களின் தரத்தில் கொடுக்க இந்த Story Maker ஆண்டுராய்டு மென்பொருள் உதவுகிறது.

நீங்கள் ஒரு செய்தியாளராக இனி பிரத்தியேக உபகரணங்கள் தேவை இல்லை. ஒரு மொபைல் போனும் அதில் Story Maker மென்பொருளும் இருந்தால் போதுமானது.

இந்த Story Maker மென்பொருள் மூலம் ஒலி வடிவிலோ அல்லது ஒளி வடிவிலோ அல்லது ஒரு புகைப்படங்களை மையபடுத்தியோ செய்திகளை உருவாக்கலாம்.

எதிர்பாராத சம்பவங்கள், பிரபலங்களின் நேர்காணல், குறிப்பிட்ட சம்பவங்கள் குறித்த ஆய்வு போன்ற பல வகை சம்பவத்திற்கு ஏற்றவாறு செய்திகளை உருவாக்க அந்த மென்பொருளிலே Templateகள் உள்ளன. கூடவே முன் அனுபவம் இல்லாத அல்லது எப்படி ஒரு தரமான செய்தி உருவாகுவது என்று உதவி தேவை படுபவர்களுக்கு அதற்க்கான கையேடும் இந்த மென்பொருளில் உள்ளது.

மேலும் இதில் நீங்கள் பதிவு செய்யும் ஒளிப்பேழையை மாற்றம் செய்யலாம். உங்களுடை கருத்துகளையும் அந்த ஒளிப்பேளையுடன் சேர்க்கலாம். உங்கள் செய்தி முழுமையானதும் அதனை Story Maker தளத்திலோ அல்லது உங்களுடைய ட்விட்டர் அல்லது பேஸ்புக் பக்கத்திலோ பதிவிடலாம். நீங்களும் ஒரு சிறந்த செய்தியாளர் ஆகலாம்.


https://www.youtube.com/watch?v=8ysdt7-r5TA&feature=player_embedded


Story Maker ஐ பதிவிறக்கம் செய்ய:
http://adf.ly/e1gMF

Posted Unknown on 3:09 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for செய்தியாளராக விரும்புபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக StoryMaker

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.