உங்கள் போன் ஐ விற்க போகிறீர்களா? விற்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை:

உங்கள் போன் ஐ விற்க போகிறீர்களா? விற்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை:


நம்மில் பலர் ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரு முறை தங்களது மொபைல் போன்களை மாற்றுவது உண்டு. காலத்திற்கேற்ப போன்களை புதுபிப்பது சரி தான். அனால் நம் தகவல் அனைத்தும் அடங்கிய நம் பழைய போன்களை நாம் என்ன செய்கிறோம்?

பலர் புதிய போன் வாங்குவதற்காக தங்கள் பழைய போன்களை விற்றுவிடுகின்றனர். பொருளாதார கண்ணோட்டத்தில் இது சரி என்றாலும் நாம் நம் பழைய போன்களை விற்கும்போது அதில் பதிந்துள்ள நம் தகவல்களையும் சேர்த்தே விற்கிறோம். அது தவறானவர்களின் கைகளில் சிக்கினால் அதனால் வரபோகும் பின் விளைவுகள் என்ன என்று அனைவரும் அறிந்ததே. அதில் உள்ள மெமரி கார்டை அகற்றிவிட்டு விற்க வேண்டும். அதே போல் போனின் மெமரியையும் பாதுகாப்பாக அழித்துவிட்டு கொடுக்க வேண்டும்.

நான் தகவல் அனைத்தையும் அழித்துவிட்டு தான் விற்கிறேன் என்று நீங்கள் கூறலாம். எலெக்ட்ரானிக் மீடியாக்களில் சேமித்த தகவல் அனைத்தையும் அழிப்பது கடினம். கணினியில் நீங்கள் அழித்ததாக குருத்தும் தகவல்களை எளிதில் திரும்ப பெற முடியும்.

அப்படி என்றால் மொபைல் போனில் பதிவான தகவல்களை பாதுகாப்பாக அழிப்பது எப்படி?

ஐ-போன் பயனாளர்களுக்கு:

Settings > General > Reset > Erase all Content and Settings

ஆண்டுராய்டு பயனாளர்களுக்கு:

ஆண்டுராய்டு போன்களில் இது சற்று நீண்ட செயல்முறை. ஆண்டுராய்டு போன்களில் பதிவான தகவல்களை பாதுகாப்பாக அழிக்க முதலில் உங்கள் போனில் உள்ள தகவல்களை Encrypt செய்திருக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யவில்லை எனில் உங்கள் போனில்

Settings > Secutiry & Privacy > Encrypt Phone

செல்லுங்கள். இது செய்யும்போது உங்கள் போனில் சார்ஜ் முழுமையாக இருக்கவேண்டும். Encrypt ஆகும் சமையத்தில் உங்கள் தகவலுக்கான பாஸ்வார்டை கொடுக்க வேண்டும். அதன் பின் உங்கள் போன் முழுவதும் Encrypt ஆக தொடங்கும்.

போன் முழுமையாக Encrypt ஆனதும் உங்கள் போன் ஐ Factory Reset செய்யுங்கள். உங்கள் தகவல் பாதுகாப்பாக அழிக்கப்பட்டுருக்கும். இனி உங்கள் மொபைல் கை மாற தயார்.

Posted Unknown on 3:06 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for உங்கள் போன் ஐ விற்க போகிறீர்களா? விற்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை:

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.