தங்கள் தகவல்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு "Chat Secure"
Android, Feature, Security 2:46 AM
இணையத்தில் நாம் செய்யும் அனைத்தும்
கண்காணிக்கப்படும் இந்த சமையத்தில் நமது தகவல் பரிமாற்றங்களை மற்றவர்கள்
உளவு பார்ப்பதை தவிர்க்கும் பல மென்பொருள்கள் இன்று வெளியாக தொடங்கியுள்ளன.இன்னும் thepiratebay, Cyanogen போன்ற பல பிரபல நிறுவனங்கள் End to End encryption அடங்கிய தங்களது மென்பொருளை உருவாக்கும் திட்டத்தினையும் அறிவித்து இருகின்றனர்.
இவர்களின் இந்த மென்பொருள்கள் எப்போது வெளிவரும் என்ற தெளிவான தகவல் இல்லை.
இந்நிலையில் தங்கள் நெருங்கியவர்களுடன் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு "Chat Secure" மென்பொருள் ஒரு வர பிரசாதம்.
இது ஐ-போன் மற்றும் ஆண்டுராய்டு போன்களுக்கு கிடைக்கபேருகிறது.
இதற்காக பிரத்யேக பயனர் கணக்கு தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் ஏற்கனவே பயன்படுத்தும் Facebook, Google கணக்குகளை இதற்க்கு பயன்படுத்தலாம். அந்த கணக்குளின் மூலமாகவே நீங்கள் chat செய்யலாம்.
ஆனால் உங்கள் chat பாதுக்காப்பாக இருப்பதற்கு எதிர்முனையில் இருப்பவரும் இந்த மென்பொருளை பயன் படுத்த வேண்டும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
==> Google, Facebook மூலம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம்.
==> நாம் சரியான நபருடன்தான் உரையாட போகிறோமா என்பதை உறுதி செய்யும் அம்சம்.
==> சோதனை முயற்சியாக படங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக அனுப்பும் வசதி.
==> அனைத்து encryption செயல்பாடுகளும் நமது போனிலேயே நடக்கும்
==> இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக நாம் எங்கிருந்து chat செய்கிறோம் என்பதையும் கூட Tor மென்பொருள் மூலமாக மறைக்க முடியும். (அதற்கு Tor மென்பொருளை நமது போனில் நிறுவி இருக்க வேண்டும்.)
==> அனைத்து தளங்களிலும் பாதுகாப்பாக உரையாடலாம்.
இதன் சிறிய செய்முறை விளக்கம்:
(குறிப்பு: இந்த மென்பொருள் தற்பொழுது இன்னும் கூடுதல் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது)
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய:
ஐ-போன்:
ஆண்டுராய்டு:
இந்த மென்பொருளை கணினியில் பயன்படுத்த விரும்புவோர்
Mac - Adium,
Linux - Jitsi
Windows - Pidgin
ஆகிய மென்பொருள் மூலம் பயன்படுத்தலாம்.





