பயனுள்ள கூகிள் தேடல் குறிப்புகள்

பயனுள்ள கூகிள் தேடல் குறிப்புகள்:

==>உங்கள் தேடலை ஒரு தளத்தோடு சுருக்க:
சில நேரம் நீங்கள் ஒரு தகவலை தேடலாம். அந்த தகவல் எந்த இணையதளத்தில் இருந்தது என்பதை மட்டும் நீங்கள் அறிந்திருக்கலாம். அப்படி என்றால் நீங்கள் இந்த குறிப்பினை பயன்படுத்தி உங்கள் தேடலை ஒரு குறிப்பிட்ட தளத்தோடு சுருக்கி விடலாம்.

உ.தா
site:vikatan.com அரசியல்
இதன் மூலம் விகடன் தலத்தில் பதியப்பட்ட அரசியல் என்ற வார்த்தை உள்ள அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும்.

==>படத்தில் இருந்து செய்தியினை எடுக்க:
சாதரணமாக நாம் கூகிள் மூலம் ஒரு செய்தி தொடர்பான படத்தினை தேடுவது வழக்கம். ஆனால் உங்களிடம் இருக்கும் ஒரு படத்தினை பற்றிய செய்தியினை நீங்கள் தேட வேண்டுமா?

https://www.google.com/imghp?hl=en&tab=wi&authuser=0

என்ற முகவரிக்கு சென்று அதில் உங்கள் படத்தை பதிவேற்றம் செய்து தேடுங்கள் அல்லது அந்த படத்தின் முகவரியை கொடுங்கள். அந்த படம் தொடர்பான அனைத்து செய்திகளும் தேடல் முடிவில் கிடைக்கும்.

==>ஒரு குறிப்பிட்ட கோபு வகையினை பதிவிறக்கம் செய்ய:

நீங்கள் வெகுநாட்களாக தேடும் ஒரு கோப்பு அல்லது ஒரு பாட்டு, புத்தகம் உங்களுக்கு கிடைக்கவில்லையா. இதனை முயற்சித்து பாருங்கள்.
-inurl:htm -inurl:html intitle:"இந்த பகுதியில் உங்களின் விருப்பத்தை இடவும்” <இங்கே உங்கள் கோப்பின் வகையை இடவும்>
உ.தா.
-inurl:htm -inurl:html intitle:"thirukural" mp3

இது திருக்குறள் தொடர்பான MP3வகை கோப்புகளின் முகவரிகளை உங்களுக்கு தரும்.

==>தடுக்கப்பட்ட இணைய தளங்களை பார்க்க:
நீங்கள் பார்க்க விரும்பும் இணையதளம் உங்கள் பகுதியில் தடுகப்பட்டுள்ளதா? அதனை நீங்கள் எளிதில் பார்வையிட கூகிளின் cache பக்கத்திற்கு செல்லுங்கள்.
உ.தா.
cache:http://vikatan.com/

இதில் நீங்கள் பார்வையிட விரும்பும் முகவரிக்கு முன் CACHE என்று இட்டால் நீங்கள் நீரடியாக அந்த பக்கத்தின் தகவல்களை பெறலாம்.
அல்லது
http://www.gmodules.com/ig/proxy?url=http%3A%2F%2Fexample.com%2F

என்பதில் http://example.com/ என்பதற்கு பதிலாக நீங்கள் பார்வையிட விரும்பும் தலத்தின் முகவரியை அடித்தால் அந்த பக்கத்திற்கு செல்லலாம். இந்த முறையில் நீங்கள் அந்த பக்கத்தில் உள்ள கோப்புகளை கூட பதிவிறக்கம் செய்யலாம்.

==>ஒரு குறிப்பிட்ட கால அளவிலான செய்திகளை தேட:
கடந்த வருடம் April முதல் August வரையிலான தமிழக அரசியல் செய்திகள் வேண்டும் என்றால் எப்படி தேடுவது?

கூகிளின் தேடு பட்டையின் கீழ் வலது புறம் “Search Tools” என்று இருக்கும். அதனை நீங்கள் கிளிக் செய்தால் தேடு பட்டையின் கீழ் “Any Time” என்று ஒரு வ இருப்பம் தோன்றும். அதில் உங்க்பால் தேடலுக்கான கால அளவை குறிபிட்டால் அந்த கால அளவில் தொடர்புடைய உங்களின் தேடல் முடிவுகள் கிடைக்கும்.

கூகிளை புத்திசாலிதனமாக பயன்படுத்துங்கள்.

Posted Unknown on 2:54 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for பயனுள்ள கூகிள் தேடல் குறிப்புகள்

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.