PhoneBloks – மாடுலார் போன் செய்ய முன்வருகிறது Motorola
Feature, Gadget, Technology 3:01 AM
PhoneBloks – மாடுலார் போன் செய்ய முன்வருகிறது Motorolaநாம் வாங்கும் SmartPhoneகள் அனைத்தும் கூடதாலக இரண்டு வருடத்திற்கு மேல் பழைய அல்லது அன்றைய தொழில்நுட்பத்திற்கு மிகவும் பின்தங்கியதாக மாறிவிடுகிறது. இது பொருளாதார வீணடிப்பு என்றாலும் இதம் மூலம் எலெக்ட்ரானிக் கழிவுகளும் அதிகரிகின்றது.
இதனை தவிர்பதற்காக Phoneblocks அறிமுகபடுத்தியது தான் Modular Phones. அதென்ன Modular Phones? தற்பொழுது ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தயாரிக்கும் குறிப்பிட்ட அம்சங்களை கொண்ட மொபிலை மட்டுமே வாங்க முடியும். அந்த மொபைலில் இல்லாத அதை விட சிறந்த அம்சங்கள் மற்றொரு நிறுவனத்தின் மொபைலில் இருக்கும்போது ஏதாவது ஒன்றை நாம் தியாகம் செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை.
இனி இது போன்ற கவலை நமக்கு வேண்டாம். PhoneBloks எடுத்த முயற்சி மக்களிடம் வெற்றி பெற்றதின் காரணத்தால் அது Motorola நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது. இன்று இந்த Modular Phoneகளுக்கான திட்டம் Project Ara ஆக தங்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். நாம் பயன் படுத்தும் மொபைல் போன்களை முதன் முதலில் அறிமுகபடுத்தியவர்களும் இந்த Motorola நிறுவனம் தான்.
கூகிள் மோடோரோலா வை வாங்கியதனால் இனி நமது மாடுலார் போன்களுக்கான கனவு நினைவாக வெகுநாள் எடுக்காது என்று நம்பலாம்.
விரைவில் உங்கள் மொபைலில் நீங்கள் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் போனில் அதிக படம் எடுப்பவரா, உங்கள் போனில் அதிகம் தகவல்களை சேமிக்கதவரா, அப்படி என்றால் உங்கள் போனின் சேமிப்பு திறனை குறைத்து கேமராவிற்கான பிளாக்கை அதிகபடுத்தலாம். அதிக பயணம் செய்பவரா, மற்றொரு அம்சத்தை குறைத்து உங்கள் போனின் பாட்டரியை அதிக படுத்தலாம். இது அத்தனையும் நீங்களே செய்யலாம்.
இதை பற்றிய ஒரு சிறிய வீடியோ
இது சந்தைக்கு வந்தால் வருடம் ஒருமுறை மொபைல் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.





